தென்காசி மாவட்டத்தில் நாட்டு கோழி பண்ணை நிறுவ 50 சதவீதம் மானியம்
1 min read
50% subsidy for setting up a country chicken farm in Tenkasi district.
தென்காசி மாவட்டத்தில் நாட்டு கோழி பண்ணை நிறுவ 50 சதவீதம் மானியம்
மாவட்ட ஆட்சியர் தகவல்
தென்காசி, செப் – 23
22.9.2026
தென்காசி மாவட்டத்தில் நாட்டுக் கோழிப்பண்ணை அலகு நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகமாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2026-27ஆம் ஆண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பதில் ஆர்வமுள்ளோர் ‘கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்அலகு) நாட்டுக் கோழிப்பண்ணை அலகு நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது.
எனவே இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்து பயனடைய விரும்புவோர் அரசு நிர்ணயித்துள்ள கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருப்பின் தங்களது கிராமத்திற்குட்பட்ட அரசு கால்நடை மருந்தகத்திற்குச் சென்று கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பம் பெற்று, தேவையான கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆவணங்களுடன் விண்ணப்பித்திட பயனாளி களுக்கான தகுதி அளவு கோல்கள்:-
- கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகள் அடையாளம் காணப்படவேண்டும்.
2 பயனாளிகளுக்கு கோழிக்கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்பு மற்றும் நீர் நிலைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
- பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
- விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- கடந்த 2023-24, 2024-25 மற்றும் 2025-26ஆம் ஆண்டு திட்டத்தின் பயனாளியாக பயனடைந்திருக்கக் கூடாது.
- பயனாளி 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும்.
- தேசிய மயமாக்கப்பட்ட / திட்டமிடப்பட்ட வங்கி / கூட்டுறவு வங்கி பயனாளிக்கு நிதியளிக்க தயாராக இருக்க வேண்டும். அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன் வந்தால், திட்டத்திற்கு நிதியளிப்பதற்கான அவரது நிதி திறன்களின் ஆதாரம் /சான்றுகளை அளிக்கவேண்டும்.
இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்