September 22, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூரில் தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையம்

1 min read

Stray dog ​​sterilization center in Kadayanallur

22.9.2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில்
தெருநாய்கள் காப்பகம் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் திறந்து வைத்தார்

தென்காசி மாவட்டம். கடையநல்லூர் நகராட்சியில் 15வது நிதிக்குழு மானியம் மற்றும் பொதுநிதி 2025 26 இன் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள தெருநாய்கள் காப்பகம் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் திருரஞ்ஜித் சிங், இ.ஆ.ப. அவர்கள் இன்று (2209.2026) திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டத்தின் முதல் நிலை நகராட்சியான கடையநல்லூர் நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்து இரண்டாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பையும், பொது சுகாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், 15-வது நிதிக்குழு மானியம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் திட்ட நிதியின் மூலம் ரூபாய் 46 லட்சம் மதிப்பீட்டில், வார்டு எண் 26-ல் தெரு நாய்கள் காப்பகம் மற்றும் கருத்தடை அறுவைச் சிகிச்சை மையம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.

இந்த மையத்தில் 89 சதுர அடியில் நிர்வாக அறை, 216 சதுர அடியில் நவீன குளிரூட்டப்பட்ட அறுவைச் சிகிச்சை அரங்கம், 100 சதுர அடியில் மருத்துவர் அறை, 72 சதுர அடியில் நாய்களுக்குத் தேவையான உணவு தயாரிக்கும் சமையலறை மற்றும் 72 சதுர அடியில் உணவுப் பொருட்கள் வைப்பு அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தலா 200 சதுர அடி பரப்பளவு கொண்ட 10 நாய்கள் பராமரிப்புக் கொட்டில்கள், மொத்தம் 2,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 தனிமைப்படுத்தப்பட்ட கொட்டில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தெருக்களில் கைவிடப்பட்ட, வயது முதிர்ந்த நோயுற்ற மற்றும் சிறப்பு பராமரிப்பு கொட்டில்களில், அறுவைச் சிகிச்சைக்குப் 24 தேவைப்படும் நாய்களை பாதுகாப்பாகப் பராமரிக்கும் வகையில் இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் சுமார் 100 நாய்களை தங்கவைத்து பராமரிக்க முடியும்.

மேலும், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை மனிதாபிமான முறையில் கட்டுப்படுத்தும் நோக்கில் கருத்தடை அறுவைச் சிகிச்சை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவை முழுமையாக குணமடையும் வரை தனிமைப்படுத்தப்பட்ட கொட்டில்களில் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படும். அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநோய் (ARV) தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தெரு நாய்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவதுடன், அவற்றின் மூலம் பரவக்கூடிய நோய்களின் பாதிப்பும் குறைக்கப்படுகிறது.

இந்தத் திட்டம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, விலங்குகளின் நலனை மனிதாபிமான அடிப்படையில் பாதுகாத்து, நகரத்தின் பொது சுகாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைகிறது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் எம்.ஏ.ஹபிபூர் ரஹ்மான், ஆணையர் த.சித்ராசோனியா மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *