September 24, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜெம் வீரமணி வழக்கு; அருண் ஐபிஎஸ் உள்பட 3 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

1 min read

Gem Veeramani case: Three officials, including Arun IPS, moved to the ‘waiting list’.

24/9/2026
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு தொடர்பாக முன்பே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலீஸ் அகாடமி இயக்குநர் அருண் உள்பட 3 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏராளமான சிறுமிகளை தொழிலதிபர் ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகார் தற்போது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த புகார் தரப்பட்டதாகவும், அப்போது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. யார் யாரெல்லாம் இதை மூடி மறைக்க முயற்சித்தனர் என்பது தொடர்பான விசாரணையும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த 2024ம் ஆண்டு சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையராக இருந்த

கண்ணனிடம் புகார் அளித்ததாகவும், இருப்பினும் அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் குற்றம்சாட்டியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது போலீஸ் அகாடமி இயக்குநராக இருக்கும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் அருண், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, சென்னை கோயம்பேடு காவல் உதவி ஆணையர் யாஷ்மினும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அருண் ஐபிஎஸ் வகித்து வந்த போலீஸ் அகாடமி இயக்குநர் பொறுப்பு, டிஜிபி ராஜீவ் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பு, மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதிக்கு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *