தென்காசி: 30-ந் தேதிக்குள் கனிமவள வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த ஆட்சியர் உத்தரவு
1 min read
Tenkasi: Collector orders installation of GPS devices in mineral transport vehicles by the 30th.
25/9/2026
தென்காசி மாவட்டத்தில் எதிர்வரும் 30.09.2026-க்குள் கனிமங்கள் எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தி அவற்றை MiMaS portal உடன் இணைக்கப்பட வேண்டும்-மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குவாரிகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து ஜிபி எஸ் கருவியை நிறுவி அவற்றை MiMaS portal-உடன் இணைப்பதற்கு கடந்த 31.08.2026 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஆனால், தென்காசி மாவட்டத்தில் நாளது தேதிவரை சுமார் 5.46% வாகனங்களுக்கு மட்டுமே ஜிபிஎஸ் கருவியினை பொருத்தி MiMaS portal-உடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே. எதிர்வரும் 30.09.2026-க்குள் கனிமங்கள் எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபி எஸ் கருவி பொருத்தி அவற்றை MiMaS portal-உடன் இணைக்கப்பட வேண்டும்.
மேலும், எதிர்வரும் 30.09.2026-க்குள் GPS கருவி பொருத்தி MiMaS portal-இல் இணைக்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே 01.10.2026 முதல் கனிமங்கள் எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்கப்படும். ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படாத வாகனங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்க இயலாது.
எனவே, தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து குவாரி உரிமையாளர்கள், கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் 30.09.2026-க்குள் தங்களது வாகனங்களில் ஜிபிஎஸ். கருவியினை பொருத்தி MiMaS portal-இல் உடனடியாக பதிவு செய்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங். தெரிவித்துள்ளார்.