September 26, 2026

Seithi Saral

Tamil News Channel

நகை கொள்ளைக்குப் பிறகு ரீல்ஸ் மதுமிதாவுக்கு மவுசு அதிகரிப்பு

1 min read

Popularity of ‘Reels’ Madhumitha surges after jewelry heist.
26.9.2026

நாகர்கோவிலை சேர்ந்த மதுமிதாவும் தனது தனித்துவமான வீடியோக்களால் லட்சக்கணக்கான பார்வயைாளர்களை பெற்றுள்ளார். அவர் தனது வீட்டில் பணம் மற்றும் நகைகள் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டியே அதிக வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மதுமிதா கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சமுகவலைதள பக்கங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
அவர் இதுவரை தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோக்கள், புகைப்படங்கள் என சுமார் 6,700-க்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதன்மூலம் லட்சக்கணக்கான பாலோயர்ஸ்களை பெற்றுள்ளார். மதுமிதாவின் பெரும்பாலான வீடியோக்கள் அவரது பிரம்மாண்டமான ஆடம்பர பங்களா, விலையுயர்ந்த கார்கள் மற்றும் பல்வேறு நகைக்கடைகளில் நகை வாங்குவது உள்ளிட்டவைகளே இடம்பெற்றிருக்கின்றன.

குறிப்பாக வீட்டின் படுக்கையறையில் கட்டுக்கட்டாக பணத்தை வைத்துக்கொண்டும், பணமழை பெய்வது போல் தனது மீதும், தன்னுடைய குழந்தையின் மீது ரூபாய் நோட்டுகளை போடும் ரீல்ஸ் வீடியோக்கள், பூஜை அறையில் நகைகளையும் பணத்தையும் பரப்பிவைத்து எடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

மதுமிதா தனது பல வீடியோக்களில், “நான் எப்போதுமே நகைகளை வீட்டில் வைக்க மாட்டேன்; பாதுகாப்பாக வங்கியின் லாக்கரில்தான் வைப்பேன்” என்று பெருமையுடன் கூறிவந்தார். ஆனால் நேற்று முன்தினம் இவர் தனது கணவருடன் நெல்லைக்கு சென்றிருந்த நேரத்தில், மர்மக் கும்பல் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 118 பவுன் நகைகள் மற்றும் பணத்தை துல்லியமாக கொள்ளையடித்துச் சென்றுள்ளது. தங்கள் வீட்டில் வைக்க மாட்டேன் என்று அவர் கூறிய நகைகள் தான் இப்போது கொள்ளை போயுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அவருடைய வீடியோவை பார்க்காதவர்களும் இப்போது பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

இந்த கொள்ளை குறித்து வினோத்குமார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவு சட்டத்தை கேஸ் கட்டர் மூலம் வெட்டி உடைத்து உள்ளே புகுந்தது தெரியவந்துள்ளது. பின்னர் முதல் மாடிக்குச் சென்று பீரோவை உடைத்து நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
வினோத்குமாரின் மனைவி மதுமிதா தங்க நகைகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை பதிவிட்டு வந்ததார். மேலும், ஒவ்வொரு மாதமும் தங்கம் வாங்குவதாகவும் அவர் தனது பதிவுகளில் தெரிவித்து வந்ததாக போலீசாரிடம் கூறப்பட்டுள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களைப் பார்த்து கொள்ளையர்கள் வீட்டில் அதிக அளவு தங்க நகைகள் இருப்பதை அறிந்து குறிவைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொள்ளையர்களின் நடமாட்டத்தை கண்டறிய அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *