September 28, 2026

Seithi Saral

Tamil News Channel

வீரமணி விவகாரத்தில் தவறான தகவலை கூறுவதா? – விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

1 min read

Chief Minister Vijay has stated incorrect information regarding the Veeramani issue – Edappadi Palaniswami.

26.9.2026
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

“திமுக ஆட்சியில் இருந்தபோதே ஜெம் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 3 முறை வாய்தா வாங்கியதால் நீதிபதி கண்டித்தார். நீதிபதி கண்டித்ததால்தான் வழக்கு விசாரணை தீவிரமானது. நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே வீரமணி கைதுசெய்யப்பட்டார். முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில்தான் கைதுசெய்யப்பட்டார் என்பது தவறான தகவல். வீரமணி விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் தவறான தகவலை கூறியுள்ளார்.

போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள வீரமணிக்கு தவெக அரசு உடந்தையாக உள்ளது. ஜெம் வீரமணி வழக்கை தவெக அரசு மெத்தனமாகவே கையாண்டது. இந்த வழக்கில் முதல்-அமைச்சர் விஜய் அரசியல் ஆதாயம் தேடுகிறார். சினிமாவில்தான் நடித்தார் என்றால் நிஜ வாழ்க்கையிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். தவெக ஆட்சியில் குற்றவாளிகள் அச்சமின்றி நடமாடுகின்றனர்.

எடப்பாடி தவெக வேட்பாளரை நான் விலைக்கு வாங்கியதாக ஆதவ் கூறுவது பொய்யான தகவல். சேலத்தில் விஜய் பரப்புரை செய்தபோது எடப்பாடியில் நான்தான் வெற்றிபெற்றேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *