September 26, 2026

Seithi Saral

Tamil News Channel

அந்நிய நேரடி முதலீடுகளை அதிகம் ஈர்த்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

1 min read

States attracting the most Foreign Direct Investment; Tamil Nadu tops the list.

26.9.2026
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அந்நிய நேரடி முதலீடுகளை அதிகம் ஈர்த்த மாநிலங்கள் பட்டியலில், ரூ.57,011 கோடி முதலீடுகளை ஈர்த்து தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
நடப்பு 2026-27ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த பட்டியலில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. ரூ.57,011 கோடி முதலீட்டை தமிழகம் ஈர்த்து இருக்கிறது; கடந்த 2025-26ம் முதல் நிதியாண்டில் ரூ.25,870 கோடியாக அந்நிய நேரடி முதலீடு இருந்தது. தற்போது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகமாகும்.

இதனால் அந்நிய நேரடி முதலீட்டு வரவுகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 30 சதவீதத்தை தமிழகம் பெற்றுள்ளது. நிதி, வங்கி, காப்பீடு, வணிகம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய சேவைத் துறையில் முதலீடுகள் அதிகரித்துள்ளது.

ஜப்பானின் முன்னணி நிறுவனமான MUFG இடமிருந்து, தமிழகத்தின் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு வந்த பெரும் முதலீடே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் மொத்த முதலீட்டில் கர்நாடகாவின் பங்கு 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 31 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 11 சதவீதமாகக் குறைந்தது. மகாராஷ்டிராவிலும் 29 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் சற்று அதிகரித்துள்ளது. அதேபோல், தற்போதைய காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்), அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி மருந்து நிறுவனமான ‘வால்கிரீன்ஸ்’ மற்றும் காபி நிறுவனமான ‘ஸ்டார்பக்ஸ்’ உள்ளிட்ட இரண்டு முக்கிய முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *