கேரள ஓணம் பம்பரில் 30 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்?
1 min read
Who is the lucky winner of the ₹30 crore Kerala Onam Bumper?
28/9/2026
கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் இன்று லாட்டரியை விற்பனை செய்தவர் தரப்பில் கூறப்பட்டாலும் நடந்த நிலையில் முதல் பரிசு ரூ.30 கோடி TL 360615 என்ற எண்ணிற்கு விழுந்துள்ளது.
இந்த டிக்கெட்டை யார் வாங்கினார் என்பது இதுவரை ரகசியமாக உள்ளது. லாட்டரியை வாங்கியவர் வெளி மாநிலத்தவராக இருக்க வாய்ப்பு குறைவு என்று லாட்டரியை விற்பனை செய்தவர் தரப்பில் கூறப்பட்டாலும் அதை அடியோடு மறுப்பதற்கு இல்லை என்ற பேச்சும் நிலவுகிறது.
கேரள லாட்டரி பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது. முதல் பரிசு ரூ.30 கோடி என்பதால் கேரளாவில் இந்த லாட்டரிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த இரு மாதங்களாக பரிசு வெல்லும் கனவுடன் இருந்த லாட்டரி பிரியர்களுக்கு இன்று அதிர்ஷ்ட எண் என்ன என்பது தெரியவந்தது
இந்த குலுக்கலில் TL 360615 என்ற எண்ணிற்கு முதல் பரிசு அடித்தது. கண்ணூர் மாவட்டம் சக்கரக்கலில் உள்ள முத்து ஏஜென்சியில் இருந்து தம்புரானில் உள்ள சப் ஏஜெண்ட் ஆன வடசராஜன் இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளார். அவரிடம் இருந்து வடகலஞ்சேரி பகுதியை சேர்ந்த சுஜித் என்ற சிறு லாட்டரி வியாபாரி 30 டிக்கெட்டுகளை வாங்கி விற்றுள்ளார். அவற்றில் ஒன்றுதான் பரிசு விழுந்த லாட்டரியாகும்.
ஓணம் பம்பரில் முதல் பரிசு வென்றவருக்கு 30 கோடியில் கிட்டத்தட்ட பாதி அளவிலான தொகை வரியாக போய்விடும். டிடிஎஸ், ஏஜெண்ட் கமிஷன், செஸ் வரி ஆகியவை பிடித்தது போக ரூ.15.50 கோடி அளவிற்கே கையில் கிடைக்கும் என லாட்டரிதுறை அதிகாரிகள் சொல்கிறார்கள். குலுக்கல் நடைபெற்ற 30 நாட்களுக்குள் பரிசுத்தொகையை உரிமை கோர வேண்டும்.
இல்லையென்றால் டிக்கெட் கையில் இருந்தாலும் பரிசுத்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். வெளி மாநிலத்தவர்களுக்கு பரிசு அடித்து இருந்தால் அவர்கள் கேரளாவில் வந்து டிக்கெட்டை வாங்கியதை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட மாநிலங்களில் கள்ளச்சந்தையில் டிக்கெட் வாங்கியிருந்தால் பரிசுத்தொகை மறுக்கப்படும்.