தென்காசி: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்- அமைச்சர் வி.கே.ராஜீவ் துவக்கி வைத்தார்
1 min read
Tenkasi: ‘Thai Maman’ Gold Ring Scheme – Minister V.K. Rajeev inaugurated it.
28/9/2026
தமிழ்நாடு முதலமைச்சர் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசியில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வி.கே.ராஜீவ் துவக்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தாய்மையையும். குழந்தையின் பிறப்பின் பெருமையையும் உணர்த்தவும், அரசு மருத்துவமனைகளில் நிகழும் குழந்தை பிறப்பை அதிகரிக்கவும், பொது மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மீதுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், இன்று 28-09-2026 மதுரை அரசு ராஜாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிருடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் 1520 குழந்தைகளுக்கு தினமும் 100 குழந்தைகள் வீதம் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளில் தங்க மோதிரம் வழங்கபட உள்ளது. தென்காசி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளுக்கு ஆகியவற்றிற்க்கு 1479 மோதிரங்கள் வரப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் இத்திட்டத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் டாக்டர் வி.கே.ராஜீவ் அவர்கள் 29 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் குழந்தைக்கு தங்க மோதிரத்தினை அணிவித்து தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் டாக்டர் பிரேமலதா, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் கோவிந்தன் வெங்கடாச்சலம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸின் உட்பட செவிலியர்கள், குழந்தைகள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.