புளியங்குடி அருகே மின் வேலியில் சிக்கியகாட்டு மாடு பலி- விவசாயி கைது
1 min read
Wild ox dies after getting caught in electric fence near Puliyangudi; farmer arrested.
28.9.2026
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே விவசாயத் தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைத்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டுமாட்டை யாருக்கும் தெரியாமல் குழிதோண்டி புதைத்த விவசாயியை இரண்டு நாட்களுக்கு பின்னர் வனத்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி, சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 66). இவருக்கு கோட்டைமலை மணத்தேரி பகுதியில் விவசாய நிலம் உள்ளது.இந்த நிலத்தில் கரும்பு பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் விவசாயி சுந்தர்ராஜ் நிலத்தில் இரவு நேரத்தில் சட்டவிரோத மாக மின்சார வேலி அமைத்துள்ளார். இந்த மின்சார வேலியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இரவில் விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு மாடு ஒன்று மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த விவசாயி சுந்தர்ராஜ் உடனடியாக இறந்த காட்டுமாட்டை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ஜேசிபி உதவியுடன் குழிதோண்டி புதைத்து விட்டார்.
இதுபற்றிய ரகசிய தகவல் புளியங்குடி வனத்து றையினருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் பொறுப்பு இளையராஜா உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தென் காசி மாவட்ட உதவி வனஅலுவலர் நெல்லைநாயகம், புளியங்குடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வனகால்நடை ஆய்வாளர் அர்னால்ட் தலைமையிலான வனத்துறையினர் விவசாயி சுந்தர்ராஜனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் விவசாயி சுந்தரராஜ் மின்வேலி அமைத்தது மற்றும் அந்த மின்சாரம் தாக்கி காட்டு மாடு உயிரிழந்ததையும் அதனை தான் ஜேசிபி மூலம் குழி தோண்டி புதைத்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்
அதனைத் தொடர்ந்து புதைக் கப்பட்ட காட்டுமாட்டை இரண்டு நாட்களுக்கு பின்னர் குழிதோண்டி வெளியே எடுத்து, திருநெல்வேலி வன கால்நடை அலுவலர் மருத்து வர் மனோகரன் தலைமை யிலான மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் காட்டுமாடு மீண்டும் குழிதோண்டி புதைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர் பாக புளியங்குடி வனத்து றையினர் வழக்குப் பதிவு செய்து விவசாயி சுந்தர்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.