September 29, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க கூட்டம்

1 min read

Tamil Nadu Government Employees Association meeting in Courtallam

28.9.2026
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் தென்காசி மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமானது குற்றாலம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜஸ்டின் திரவியம் நினைவரங்கத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் மு.வைத்திலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் (பொறுப்பு) க.பாலசுப்பிரமணியன், பேரூராட்சி பணியாளர் சங்கத்தின் மேனாள் மாநில தலைவர் ஜெ.எட்வர்டு ஜெபசீலன், தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் த.முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் இரா.சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராகமு.வைத்திலிங்கம், செயலாளராக ஊராட்சி செயலர் சங்கத்தின் தங்கத்துரை, பொருளாளராக பேரூராட்சி பணியாளர் சங்கத்தின் சம்சுதீன் ஆகியோரும், துணை தலைவர்களாக வேளாண்மைத்துறை கா.அனந்தகேசவன்,

பொது சுகாதாரத்துறை ஷேக் உதுமான், ஊராட்சி செயலர் சங்க லட்சுமணன், சிலம்பரசன் ஆகியோரும், இணைச் செயலர்களாக வருவாய்த்துறை மெர்வின் ஜோஸ், இந்து சமய அறநிலையத்துறை சுப்பிரமணியன், வேளாண்மைத்துறை க.சாம்சன் ஆகியோரும்,.
மாநில செயற்குழு உறுப்பினர்களாக பேரூராட்சி பணியாளர் சங்க முத்து, வேளாண்மைத்துறை இரா.சரவணன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேற்படி கூட்டத்தில் தமிழக அரசின் தேர்தல் கால வாக்குறுதியில் அறிவித்துள்ள படி பழைய ஓய்வூதியத் திட்டத்தினை செயல்படுத்திட வேண்டும், கடந்த 10 ஆண்டுகளாக மதிப்பூதியம் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர் களைபணி நிரந்தரம் செய்யவேண்டும், ஓய்வூதிய திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஓய்வூதியத்தினைக் குறைப்பதற்காக கடந்த 11.09.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள நிதித்துறையின் அறிவிப்பினை திரும்ப பெறவேண்டும், மேலும் அதற்கான விதிமுறைகள், மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வெளியிட வேண்டும்,

ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு தேர்வுநிலை,சிறப்பு நிலை, ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களையும் இணைத்திட வேண்டும், மேலும் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *