September 29, 2026

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் நடைபெற்ற 109-வது விழாவில் தமிழ்நாடு அரசுக்கு ஸ்கோச் விருது

1 min read

Tamil Nadu Government receives SKOCH Award at the 109th event held in Delhi.

29.9.2026
புதுடெல்லியில் நடைபெற்ற 109-வது பிரம்மாண்ட விழாவில், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கு மதிப்புமிக்க ‘ஸ்கோச்’ வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு பிரிவானது, மாநிலம் முழுவதும் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் வேலைநாடுநர்களின் விவரங்களை பதிவு செய்தல், புதுப்பித்தல், பொது மற்றும் தனியார் துறை வேலையளிப்போர்களுக்கு பரிந்துரை செய்தல், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துதல், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், கண்காட்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் வாயிலாக தொழில்நெறி வழிகாட்டுதல் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை நடத்துதல், மெய்நிகர் கற்றல் இணையதளம் வாயிலாக போட்டி தேர்வுகளுக்கு மென்பாடக்குறிப்புகளை வழங்குதல், கல்வி தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஸ்கோச் குழுமம் 2026 ஆம் ஆண்டிற்கான-ற்கான “இந்தியாவின் நேர்மையான தன்னாட்சி பெருமை” என்ற தலைப்பில் நடத்திய அனைத்துத் துறைகளுக்கான போட்டியில் “சிறப்பிற்கான சான்று” என்ற பிரிவின் கீழ் “தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி” என்ற தலைப்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை பங்கேற்றதில் ஸ்கோச்’ வெள்ளி விருதிற்காக தேர்வு செய்யப்பட்டது. இதன் தொடர்பில், 26.09.2026 அன்று புதுதில்லியில் நடைபெற்ற 109-ஆவது ஸ்கோச் விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கு ஸ்கோச் குழுமத்தால் ஸ்கோச்’ வெள்ளி விருது வழங்கப்பட்டது.

ஸ்கோச் குழுமத்தின் தலைவர் சமீர் கோச்சரிடமிருந்து இவ்விருதினை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் சி. பழனி, பெற்றுக்கொண்டார். இவ்விழாவில், கூடுதல் இயக்குநர்(வேலைவாய்ப்பு) வே. மீனாட்சி மற்றும், இணை இயக்குநர்(தொழில்நெறி வழிகாட்டல்) ஆ. அனிதா ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *