தென்காசி: சிறுபான்மையினர் நலத்துறை மூலம் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்
1 min read
Tenkasi: Matriculation scholarship scheme through the Department of Minorities Welfare.
29/9/2026
தமிழகத்தில் சிறுபான்மை யினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பிவ. மிகப்பிற்படுத்தப்பட்ட(மி.பி.வ) [ம] சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு 2026-27ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
L அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.வ/மி.பி.வ.சி.ம மாணவ மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
(1) பாலிடெக்னிக், இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை (ம) ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.250,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
2) விண்ணப்பிக்கும் முறை 2026-27-ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகைத் क्रक्रीण σούσι σοοτυπος, University Management Information System (UMIS) (httpsumistn.gov.in.) என்ற இணையதளம் மூலம் பெறப்படுகிறது.
3) தகுதியுள்ள மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) https://umis.tn.gov.in στ இணையதளத்தின் மூலம் 18.09.2026 முதல் 2110.2026 வரை கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
4) கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.