October 1, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்திய விமானி சுமித் மச்சாருக்கு குஜராத் மாநில அரசு விருது அறிவிப்பு

1 min read

Gujarat government announces award for Indian pilot Sumit Machhar

1/9/2026
விமான பயணிகள் 174 பேரை காப்பாற்றிய இந்திய விமானி சுமித் மச்சாருக்கு குஜராத் மாநில அரசு விருது அறிவித்துள்ளது.
துபாய்-டெல் அவிவ் விமானப் பயணத்தின்போது, ​​இந்திய விமானி கேப்டன் சுமித் மச்சார் தனது துணை விமானியுடன் நடத்திய பரபரப்பான போராட்டம், உலகெங்கிலும் உள்ள ஊடகங்களின் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. விமானத்தில் 174 பேருடன் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​தனது துணை விமானியால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த மச்சார், நடுவானில் ஏற்படவிருந்த ஒரு பெரும் விபத்தைத் தடுக்க உதவினார்.

தனது காயங்களையும் பொருட்படுத்தாமல், மச்சார் எதிர்த்துப் போராடி விமானியின் அறைக்கதவைத் திறந்தார். இதனால் பயணிகளும் விமானப் பணியாளர்களும் தலையிட்டு, தாக்குதல் நடத்தியவரை அடக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து விமானம் திசை திருப்பப்பட்டு சவூதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய செய்தி நிறுவனங்களில் சில, இந்தச் சம்பவத்தை எவ்வாறு செய்தியாக வெளியிட்டன என்பது பின்வருமாறு:

மச்சார் ஒரு நாயகனாகப் போற்றப்பட்டதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டது. இஸ்ரேல் செல்லும் விமானத்தில் கத்தியால் குத்தப்பட்ட இந்திய விமானியின் வீரச்செயல் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பாராட்டைப் பெற்ற இந்திய விமானி என்ற தலைப்பில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏபி செய்தி நிறுவனமும் மச்சாரை ஒரு கதாநாயகன் என்று வர்ணித்துள்ளது. நாயகனாகப் போற்றப்படும் பிளைதுபாய் விமானிநியூயார்க் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது. மச்சார் ஒரு நாயகனாகப் போற்றப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் செய்தி வெளியிட்டது.

விமானத்தை மோதச் செய்வதற்கான ஒரு முயற்சியை முறியடித்த, நடுவானில் நிகழ்ந்த தொடர்ச்சியான “அற்புதங்கள்” என இந்தச் சம்பவத்தை விவரித்து, விமானி மற்றும் பயணிகளின் பங்கை டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிகை விவரமாக வெளியிட்டு இருக்கிறது. சிஎன்என் செய்தி நிறுவனம் ‘வீரர்கள்’ என்று வர்ணித்ததுடன், துபாயிலிருந்து டெல் அவிவ் செல்லும் விமானத்தைக் கடத்த சம்பவம் முறியடித்தது எப்படி என்பது குறித்து விவரித்துள்ளது.
இந்நிலையில், குஜராத் பூர்வீகத்தைக் கொண்ட இந்திய விமானி கேப்டன் சுமித் மச்சாருக்கு, அவரது அசாதாரணமான வீரத்தைப் பாராட்டி குஜராத் அரசு ‘விசிஷ்ட குஜராத் கரிமா விருது வழங்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். இவரின் இந்தச் சமயோசித புத்தியையும் வீரத்தையும் கௌரவிக்கும் விதமாகவே குஜராத் அரசு இந்த உயரிய விருதை அவருக்கு அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *