October 2, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா

1 min read

Sivaji Ganesan’s birthday celebration in Tenkasi

1.10.2026
தென்காசியில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி காந்தி சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆலங்குளம் எஸ்.செல்வராஜ் தலைமை தாங்கினார்.முன்னாள் மாவட்ட தலைவர் கொடிக்குறிச்சி முத்தையா முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில்
அலங்கரிக்கப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் மத்தளம் பாறை ஜெ.ஜேம்ஸ், மாவட்ட பொதுச் செயலாளர் ஏஜிஎம். கணேசன், நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர், மாவட்ட மகளிர் அணி தலைவி பூமாதேவி, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாநில பொதுச் செயலாளர் செங்கை கண்ணன், சிவாஜி மன்றம் கணேசன், கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் நகரத் தலைவர் மணி படையாட்சி, நகர துணை தலைவர் சித்திக்,நகர பொருளாளர் ஈஸ்வரன், பீர்முகம்மது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *