தென்காசி மாவட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்களை சேர்க்கும் பணி தீவிரம்
1 min read
Intensive efforts are underway to enroll eligible voters who were previously left out in Tenkasi district.
1.10.2026
தென்காசி மாவட்டத்தில்
புதுப்பித்தல் செயல்முறையின் கீழ் விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக தொடர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் ரஞஜீத் சிங்,தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான பணிகள் முடிவு பெற்று இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டு, அதனடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 நடந்து முடிந்துள்ளது.
வாக்காளர் பதிவு விடுபட்டவர்களுக்கான சிறப்பு இயக்கம்
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஏற்கனவே நிறைவடைந்துள்ள மாநிலங்களில் தொடர் புதுப்பித்தல் செயல்முறையின் கீழ் விடுபட்ட மற்றும் இளம் மற்றும் முதல் முறை தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களால் தொடர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
படிவம் 6 உடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழிப் படிவம் சிறப்பு தீவிர திருத்த கால கட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும். சிறப்பு தீவிர திருத்தம் இல்லாத காலக்கட்டத்தில், வாக்காளர்கள் பதிவு விதிகள் 1960-ன் படி பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் புதுப்பித்தல் செயல் முறை மற்றும் இணையவழியின் கீழ் விடுபட்ட மற்றும் இளம் மற்றும் முதல் முறை தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான படிவம் 6 உடன் ஏதும் சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், வாக்காளர்கள் பதிவு விதிகள் 1960-ன் படி பொருந்தக்கூடிய படிவங்கள் சமர்பித்து விடுபட்ட மற்றும் இளம் / முதல் முறை தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்க்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் ரஞஜீத் சிங் தெரிவித்துள்ளார்.