October 2, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி பகுதியில் இடி மின்னலுடன் மழை- மின்னல் தாக்கியதில் தென்னையில் தீ

1 min read

Thunderstorm and rain in the Tenkasi area – Lightning strikes cause fire in coconut trees

1.10.2026
தென்காசி பகுதியில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது அப்போது கணக்கப்பிள்ளை வலசை பகுதியில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீ பற்றி எரிந்தது.

தென்காசி செங்கோட்டை பகுதிகளில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி செங்கோட்டை பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில் கணக்கப்பிள்ளை வலசை பகுதியில் இன்று மாலையில் இடி மின்னலுடன் பெய்த மழையின் போது கணக்கப்பிள்ளை வலசை பகுதியைச் சார்ந்த முன்னாள் சத்துணவு அமைப்பாளர் செண்பகம் என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதால் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.

அதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் ஒருபுறத்தில் மழை பெய்து கொண்டிருக்கும் போதே
மறுபுறத்தில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்த நேரத்தில் மழையின் வேகம் அதிகரித்ததால் தென்னை மரத்தில் பற்றிய கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது இதனால் பொதுமக்கள் ஆறுதல் அடைந்தனர்.

இன்று மாலை தோரணமலை பகுதியிலலும் செங்கோட்டை பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அந்தப் பகுதியில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *