பழ.நெடுமாறன் மகன் ஆஸ்திரேலியாவில் மரணம்
1 min read
Pazha. Nedumaran’s son dies in Australia.
1.10.2026
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ நெடுமாறன் மகன் மாணிக்கம் ஆஸ்திரேலியாவில்மரணம் அடைந்தார்.அவரது இறுதிச் சடங்கில் அவரது தந்தை பழ.நெடுமாறன் பங்கேற்க முடியாத துயரம் ஏற்ப்பட்டுள்ளது
கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவுக்காகச் சிகிச்சை பெற்றுவந்த மாணிக்கம் , சிகிச்சை பலனின்றி, இந்திய நேரப்படி இன்று காலை 8.45 மணிக்குக் காலமானார். அவருடைய இறுதிச் சடங்குகள் புத்த மத வழக்கப்படி, மெல்பர்ன் நகரிலேயே நடைபெற உள்ளது. பழ. நெடுமாறனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு இருப்பதால் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவரும் அவருடைய மனைவியும் செல்லவில்லை என்று மூத்த ஊடகவியலாளர் ஏகலைவன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “15 நாட்களுக்கு முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தொடர்பு கொண்டார். ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் மகன் மாணிக்கம் அவர்களின் மருத்துவ அறிக்கைகளை அனுப்பி சிகிச்சை தரமுடியுமா? என்று விசாரித்தார். அறிக்கைகளை பார்த்து மிகவும் ஆபத்தான நிலையில்தான் உள்ளார். என்றாலும் நேரில்வந்தால் சிகிச்சை அளிக்க முடியும் என்றேன். நேரில் வரமுடியாது மருந்துகளை அனுப்பிவைக்க முடியுமா என்று கேட்டார். மருந்துகளை அனுப்பி சாப்பிட்டால் குணமாகாது என்றே கூறினேன். ஆனால் இவ்வளவு விரைவாக மரணிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆழ்ந்த இரங்கல்கள், மாணிக்கம் நெடுமாறன் மறைந்தார்.
கொரோனோ ஊசி போட்ட ஆஸ்த்ரேலிய ஆண்களில் 5 இல் ஒருவர் புற்றுநோய் பாதிக்கக்கூடிய ஆபத்தில் உள்ளனர். அமைதி தவழும் முகம், அன்பு ததும்பும் பேச்சு. உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ. நெடுமாறன். அவர்களின் மகன். மாணிக்கம் நெடுமாறன் (57) அவர்கள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று (அக்டோபர் 1, 2026) காலை இந்திய நேரம் 8.45 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணிக்கம் நெடுமாறன் அவர்கள் பல ஆண்டுகளாக மெல்பர்ன் நகரில் பணிபுரிந்து வந்தார். அவர் புத்த மதத்தைத் தழுவி புத்தத் துறவியாக வாழ்ந்து வந்தார். கடந்த ஒரு மாத காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று காலை அவர் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச் சடங்குகள் புத்த மதப்படி மெல்பர்ன் நகரிலேயே நடைபெறும். திரு. பழ. நெடுமாறன் அவர்களின் கடவுச் சீட்டு முடக்கப்பட்டிருப்பதால் அவரும் அவரது துணைவியாரும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளனர்.” என்று கூறியிருக்கிறார்.