October 4, 2026

Seithi Saral

Tamil News Channel

சிவகிரி: காதல் திருமணம் செய்த பெண் கத்திமுனையில் கடத்தல்-பெற்றோர் மீது வழக்குப்பதிவு விசாரணை

1 min read

Sivagiri: Woman who had a love marriage abducted at knifepoint; case registered against parents; investigation underway.

4/10/20-26
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள குமாரபுரம் பகுதியில் காதல் திருமணம் செய்த பெண் சிவகாசியில் வசித்து வரும் நிலையில் பெண்ணின் பெற்றோர்கள் கத்தி முனையில் கடத்தியதாக அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் தந்தை, தாய், சகோதரன், மற்றும் உறவினர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே குமாரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன் என்பவரது மகன் இசக்கிமுத்து (வயது 26), இவர் அதே கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் மகள் கீர்த்திகா மகேஸ்வரி (வயது 22) என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண் டார்.

இதற்கு கீர்த்திகா மகேஸ்வரியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ரிசர்வ்லைன் திருப்பதி நகரில் இசக்கிமுத்து தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கீர்த்திகா மகேஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிவகாசி திருப்பதி நகருக்கு வந்து இசக்கிமுத்துவிடம் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து இசக்கிமுத்து சிவகாசிடவுன் போசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவத்தன்று இரவு கீர்த்திகா மகேஸ்வரியின் தந்தை சசிக்குமார், தாய் மகாலட்சுமி சகோதரர் சஞ்சீவ் மற்றும் உறவினர்கள்,
இசக்கிமுத்துவின் வீட்டிற்கு வந்தனர்.

அப்போது இசக்கிமுத்துவிடம் தகராறு செய்து, கத்தியை காட்டி மிரட்டி கீரத்திகா மகேஸ்வரியை காரில் கடத்திச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கிமுத்து சிவகாசி டவுன் போசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பெண்ணின் தந்தை சசிக்குமார், தாய் மகாலட் சுமி, சகோதரர் சஞ்சீவ் மற்றும் உறவினர் ஸ்ரீகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *