October 4, 2026

Seithi Saral

Tamil News Channel

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடிப்பு

1 min read

Sri Lankan Navy detains 9 Rameswaram fishermen along with their boat.

4.10.2026
ராமேஸ்வரம் மீனவர் 9 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன் மீன் பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன் தினம் (அக் 3) காலை 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர். நெடுந்தீவு தெற்கு கடற்பரப்பில் அன்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடம் எபிஸ்டன் என்பவரது விசைப்படகு, அதிலிருந்த எபிஸ்டன், ஜான் சாய்சன், ஸ்டீபன், மோபீஸ், ஆன்டனி பிரதீப், அந்தோனி புரூட்டஸ் உள்பட 9 மீனவரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
காங்கேசன்துறை கடற்படை முகாம் அழைத்துச் சென்று
விசாரணைக்கு பின் மீனவர் 9 பேரும் படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் 9 பேரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படை கைது செய்த 9 மீனவர்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *