அரியலூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
1 min read
Gram Sabha meeting in Ariyalur district
4.10.2026
மகாத்மா காந்தியின் 157 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,அரியலூர் மாவட் டத்தில் பல்வேறு கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.
ரெட்டிபாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் அங்குள்ள இ சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஆர் சோலைமுத்து முன்னிலை வகித்து கூட்ட தீர்மானங்களை வாசித்து,முடிவில் கூட்டத்தில் கலந்து கொண்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்அகஸ்டாஞானபெல்லா,ஊராட்சி ஒன்றிய ஓவர்சியர் சக்திவேல், கிராமப் பொது மக்கள், சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோருக்கு நன்றி கூறினார்.விளாங்குடி ஊராட்சி கிராம சபை கூட்டம் அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற து கூட்ட தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் ப கண்ணகி வாசித்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அகஸ்டா ஞானபெல்லா,உதவி திட்ட அலுவலர் இராஜபாண்டியன் கிராம பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.நாகமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், அக்கிராமத்தின் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சி சகாயராஜ்,கிராம பொது மக்கள்,சுய உதவி குழுவினர் விஏஓ கார்த்திகேயன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிலையில் கூட்டத் தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் திருநாவுக்கரசு வாசித்து முடிவில் அனைவரு க்கும் நன்றி கூறினார். பெரிய திருக்கோணம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அங்குள்ள காமராஜபுரம் ஆதிதிராவிடர் நலப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.கூட்ட தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் முருகேசன் வாசித்து,முடிவில் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சி சகாயராஜ்,சத்துணவு அமைப்பாளர் சாந்தி,விஏஓ சேட்டு,வி ஹெச்என் ஜான்சி ராணி ,சுமலதா கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அம்பாபூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் அங்குள்ள இ சேவை மையக் கட்டிடத்தில் நேற்று நடை பெற்றது.கூட்டத் தீர்மானங் களை ஊராட்சி செயலாளர் ம.பழனிச்சாமி வாசித்து, கூட்டத்தில் கலந்து கொண்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சா தனவேல், கிராம பொது மக்கள்,மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்ட பலருக்கு நன்றி கூறினார் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய ஓவர்சியர் ஐஸ்வர்யா,வி ஹெச்என் மனோன்மணி,ரேஷன் கடை பணியாளர்கள் லட்சுமி, ராதிகா விஏஓ வெங்கடேசன் உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர்.மேற்படி பல்வேறு கிராம ஊராட்சி களில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் ,ஜல் ஜீவன் திட்டம் தூய்மையான குடிநீர் விநி யோகம் உறுதி செய்தல் பாரத கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் , தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட கருப் பொருட்கள் விவாதிக்கப் பபட்டன.