October 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு.

1 min read

Three people imprisoned under the Goondas Act in Tenkasi district.

4.10.2026
தென்காசி மாவட்டத்தில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த மூன்று குற்றவாளிகளை தென்காசி எஸ்பி எஸ்.அசோக்குமார், மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மருதப்பபுரத்தைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவரது மகன் முத்தரசன் (வயது 23), பொட்டல்புதூரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் கார்த்திக்ராஜா (வயது 23) மற்றும் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பூலான்குடியிருப்பைச் சேர்ந்த வாவாகனி என்பவரின் மகன் அபூபக்கர் சித்திக் (வயது 25) ஆகியோர் மீது பிரிவு தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட போலீஸ் எஸ்.பி. அசோக் குமார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் மேற்கண்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *