விருதுநகர் மாவட்டத்தில் 31-ந் தேதிக்குள் தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
1 min read
Collector instructs factory owners in Virudhunagar district to renew licenses by the 31st.
9.10.2026
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் தொழிற்சாலைகள், 2027-ஆம் ஆண்டிற்கு தொழிற்சாலைகள் சட்டத்தின்படியான உரிமத்தினை இணையதள மூலம் வரும் 31.10.2026-க்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
உரிமம் புதுப்பித்தலுக்காக அலுவலகத்திற்கு நேரில் வர தேவையில்லை. 2027-ம் ஆண்டிற்கான உரிமம் புதுப்பித்தலை www.dish.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே உரிய கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடனே புதுப்பிக்கப்பட்டதற்கான உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை. உரிமத் திருத்தம், உரிமம் மாற்றம் ஆகியவற்றிற்கு இணையதள வழி மூலமே உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
அக்டோபர் 31-ந் தேதிக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது ஏற்கனவே நடைமுறையில் உள்ள தாமத கட்டணம் செலுத்த நேரிடும். உரிய உரிமம் இன்றி செயல்படும் தொழிற்சாலைகள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டவையாகும். எனவே கடைசி நேர நெருக்கடி மற்றும் இணையதள வழி சிக்கல்களை தவிர்க்க தொழிற்சாலை நிர்வாகங்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கோரப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளுக்கு PESO மற்றும் DM உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலைகளின் வரைபடத்தில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு (தொழிற்சாலைகள் சட்டம் விதி-4, G.O. Ms. No. 50, Labour welfare and Skill Development (M2), 27 th May 2025) ஏற்ப மட்டுமே உரிமம் புதுப்பிக்கப்படும்.
இதேபோல் ஒப்பந்த தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல்) சட்டம் 1970 மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் விதிகள் 1975 மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளர்கள் சட்டம் 1979 மற்றும் தமிழ்நாடு விதிகள் 1983-ன் கீழான உரிமத்தையும் ஒப்பந்ததாரர்கள் இணையவழி மூலம் உரிய கட்டணம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு No. 112 முதல் தளம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர், என்ற முகவரியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.