October 10, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவிலில் 14-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

1 min read

Farmers’ grievance redressal meeting in Sankarankovil on the 14th

9.10.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வரும் 14.10.2026 அன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அனிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தில் அக்டோபர்-2026 இன் மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14.10.2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 1100 மணியளவில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அனிதா தலைமையில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது.

மேற்படி கூட்டத்திற்கு சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு சங்கரன்கோவில் வருவாய் கோட்டாச்சியர் அனிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *