October 10, 2026

Seithi Saral

Tamil News Channel

இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா: சிலைக்கு அமைச்சர்கள் மலர்மாலை

1 min read

Immanuel Sekaran’s birth anniversary celebration: Ministers garland the statue.

9.10.2026
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரனுக்கு அவரது முழுஉருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டு கடந்தாண்டு முதல் அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப் படுகிறது.

இதைத் தொடர்ந்து தியாகி இமானுவேல் சேகரனின் 102 பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை பரமக்குடியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் முன்பு அமைக்கப் பட்டுள்ள அவரது முழுஉருவச் சிலைக்கு தமிழ்நாடு
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மருத்துவர்.டி.கே.பிரபு ஆகியோர் மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மணிமண்டபத்தில் நடந்த அரசு விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமை தாங்கினார். பரமக்குடி சார் ஆட்சியர் மருத்துவர் ச. வினோதினி அனைவரையும் வரவேற்றார்.விழாவில் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மருத்துவர்.டி.கே.பிரபு ஆகியோர் அரசுத் துறையின் சார்பில் 76 நபர்களுக்கு ரூ 78 லட்சத்தி 95 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி,சட்டமன்ற உறுப்பினர்கள் கே.கே.கதிரவன்( பரமக்குடி), குழந்தை ராணி நாச்சியார் (சிவகங்கை),இளங்கோ(மானாமதுரை),கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி)திவ்யான்ஷீநிகம்,துணை ஆட்சியர்( பயிற்சி)சினேகா, பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி,துணைத் தலைவர் கே.ஏ.எம்.குணசேகரன், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், உதவி பொறியாளர்கள் வைஜெயந்தி,வைத்தியலிங்கம், பரமக்குடி வட்டாட்சியர் என். ரெங்கராஜ், நகர்மன்ற உறுப்பினர் எம்.வடமலையான், தியாகி இமானுவேல் சேகரன் பேரனும், தேவேந்திர பண்பாட்டு கழக தலைவருமான பொறியாளர் சக்கரவர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலிதளபதி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர் தியாகி வே.இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மருத்துவர்.டி.கே.பிரபு ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

-குணாளன், நிருபர், பரமக்குடி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *