October 9, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகர்: நான்கு வழிச்சாலை நிலத்திற்கு இழப்பீடு பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம்

1 min read

Virudhunagar: Special camp for those who have not received compensation for four-lane highway land.

9.10.2026

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி வெளியி்ட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் வடுகபட்டி – தெற்குவெங்காநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை – 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய நில உடைமைதாரர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் பொருட்டு நில உடைமைதாரர்களிடமிருந்து நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலங்களில் நடைபெற உள்ளது.
அதனடிப்படையில், இராஜபாளையம் வட்டத்தில் 13.10.2026 மேலூர்துரைசாமிபுரம் கிராமத்திலும், 16.10.2026 இளந்திரைகொண்டான் கிராமத்திலும், 23.10.2026 சமுசிகாபுரம் கிராமத்திலும், 28.10.2026 புத்தூர் கிராமத்திலும், 02.11.2026 தெற்குவெங்காநல்லூர் கிராமத்திலும், 06.11.2026 மேலராஜகுலராமன் கிராமத்திலும்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் 15.10.2026 நத்தம்பட்டி கிராமத்திலும், 21.10.2026 அத்திகுளம் செங்குளம் கிராமத்திலும், 27.10.2026 அயன் நாச்சியார்கோவில், நல்லிங்கப்பேரி, தெய்வேந்திரி கிராமங்களிலும், 29.10.2026 பூவாணி, முத்துவெங்கட்ராயபுரம் கிராமங்களிலும், 03.11.2026 களத்தூர், எஸ்.அம்மாப்பட்டி, வடுகப்பட்டி கிராமங்களிலும், 05.11.2026 பிள்ளையார்குளம் கிராமத்திலும், 10.11.2026 குன்னூர் கிராமத்திலும், 12.11.2026 விழுப்பனூர், பாட்டக்குளம் சல்லிப்பட்டி கிராமங்களிலும், நடைபெற உள்ளது.

ஆகவே, தேசிய நெடுஞ்சாலை – 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான உரிமை குறித்த ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்காத நிலஉடைமைதாரர்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *