October 11, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை அருகே அக்காள் மகன் வெட்டி கொலை- தாய்மாமளுக்கு வலைவீச்சு

1 min read

Nephew hacked to death near Nellai; manhunt launched for maternal uncle

10.10.2026
நெல்லை அருகே குடும்ப சொத்து தகராறில் அக்காள் மகனை அசிவாளால் வெட்டிக் கொலை செய்த தாய்மாமன் உட்பட இருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி அருகே உள்ள மானூர் சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் முருகன் அவரது மகன் முத்துக்காளை (வயது 30) கூலி தொழிலாளி இவருக்கு சாந்தி(வயது 24) என்ற மனைவியும் மூவிசா, மூவி சானா, என்று இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்

இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அவரது தாய்மாமா செல்லையா என்பவரது மகன் தாமஸ் பாண்டியன் (வயது 39) என்றவருக்கும் சொத்து பிரச்னை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஆக.2ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முத்துக்காளை சுப்பையாபுரம் மெயின் தெருவில் உள்ள பாண்டியன் சூப்பர்மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அவரது தாய்மாமா தாமஸ் பாண்டியன் மற்றும் அவரது மைத்துனர் வீராணம் பகுதியைச் சார்ந்த அய்யாதுரை என்பவரது மகன் அஜித்குமார் (வயது 28) இருவரும் முத்துக்காளையை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி வட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த முத்துக்காளை உடனடியாக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முத்துக்காளை நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்த நெல்லை ஊரக டிஎஸ்பி (பொறுப்பு) சதிஷ்கண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்து முத்துக்காளை மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில் மானூர் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தாமஸ்பாண்டியன் அஜித்குமார் ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில் தாமஸ்பாண் டியனுடன் சேர்த்து அவருடன் உடன்பிறந்தவர்கள் 6 பேர் இதில் மூன்று பெண்கள் மூன்று ஆண்கள் கொலையான முத்துக்காளையின் தாய் தேன்மலர் இவர் தாமஸ் பாண்டியனின் அக்கள் ஆவார்.

தேன்மலர் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு நகை எதுவும் போடவில்லை கடந்த சில நாட்களுக்கு முன்பு தேன்மலர் இறந்துவிட்டார். தேன்மலர் மகன்களான முத்துக்காளை மற்றும் கோபி (வயது 24) ஆகியோருடன் தாமஸ் பாண்டியன் தங்களது தந்தை சொத்தில் விடுதலை பெறுவதற்காக இவர்களிடம் கையொப்பம் கேட்டு வந்துள்ளார். ஆனால் இருவரும் கையெழுத்து போட மறுத்துள்ளனர். தங்களது தாய்க்கு நகை எதுவும் போடாததால் சொத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டு வந்துள்ளனர்.

இதனால் அவர்களுக்குள் ஏற்கனவே தகராறு இருந்து வந்தது இந்த ஆத்திரத்தில் இருந்த தாமஸ் பாண்டியன் முத்துக்காளை தனது மைத்துனருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளார் என்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் இருவரையும் தேடி வருகிறோம் விரைவில் கைது செய்வோம் என்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *