விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக முகாம்- ஆட்சியர் ஆய்வு
1 min read
Camp for adding names to the voters’ list in Virudhunagar district – Collector inspects
10.10.2026
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் சட்டமன்ற தொகுதி வே.வ.வன்னியப்பெருமாள் கல்லூரி மற்றும் திருவள்ளுவர் வித்தியா சாலா பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி இன்று(10.10.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
மாவட்டத்தில் 01.01.2027 தகுதியாக கொண்டு 18 வயது நிரம்பிய தகுதியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்காக இன்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
மாவட்டத்தில் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 1,04,604 ஆண்களும், 1,10,595 பெண்களும், 32 இதர பிரிவினரும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,09,305 ஆண்களும், 1,15,633 பெண்களும், 41 இதர பிரிவினரும், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,11,807 ஆண்களும், 1,18,512 பெண்களும், 63 இதர பிரிவினரும், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 1,11,276 ஆண்களும், 1,18,200 பெண்களும், 28 இதர பிரிவினரும்
விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் 97,916 ஆண்களும், 1,03,845 பெண்களும், 40 இதர பிரிவினரும், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,00,865 ஆண்களும், 1,07,442 பெண்களும், 30 இதர பிரிவினரும், திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் 1,01,409 ஆண்களும், 1,04,394 பெண்களும், 16 இதர பிரிவினரும் என ஆக மொத்தம் விருதுநகர் மாவட்டத்தில் 7,37,182 ஆண்களும், 7,78,621 பெண்களும், 250 இதர பிரிவினரும் என மொத்தம் 15,16,053 வாக்காளர்கள் உள்ளனர்.
அதன்படி இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடி மையங்கள், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடி மையங்கள், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடி மையங்கள், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடி மையங்கள், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடி மையங்கள், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடி மையங்கள், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1999 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இந்த சிறப்பு முகாமில் 1999 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் (BLO), 202 கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விருதுநகர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.