விருதுநகர்: உயர்கல்வி மாணவர்களுக்காக கல்வி உதவி மையம்
1 min read
Virudhunagar: Educational Support Centre for Higher Education Students
10/10/2026
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
2026–2027 ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள விருதுநகர் மாவட்ட மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது தொடர்பான தகவல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்ள, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நான்காவது தளத்தில் இயங்கி வரும் கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டறையை நேரிலோ அல்லது (9976903873, 9698810699, 7598510114, 9566389092) ஆகிய தொலைபேசி எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
அரசு பள்ளிகள் (Government), அரசு உதவி பெறும் பள்ளிகள் (Government Aided), மெட்ரிக் பள்ளிகள் (Matriculation), சி.பி.எஸ்.இ. பள்ளிகள் (CBSE) என அனைத்து வகைப் பள்ளி மாணவர்களுக்கும் பொருந்தும்.
உயர்கல்வியில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, கல்விக் கடன் தொடர்பான விவரங்களைப் பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.