நாட்டின் ஜனநாயகத்தை பிரதமர் மோடி சீரழிக்கிறார்: சென்னையில் ராகுல் பேச்சு
1 min read
PM Modi is undermining the country’s democracy: Rahul speaks in Chennai.
10.10.2026
‘தமிழகத்தை தொட விட மாட்டோம். அனைவரும் கேள்வி கேட்க வேண்டும்,’ என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார்.
சென்னை தீவுத்திடலில் நடந்த மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியில் அவர் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
‘தமிழகத்தை தொட விட மாட்டோம். அனைவரும் கேள்வி கேட்க வேண்டும்,’ என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார்.
சென்னை தீவுத்திடலில் நடந்த மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியில் அவர் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
அவர் பேசியதாவது;
தமிழக மக்கள் மீது ஹிந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். தமிழ் கலாசாரம், தமிழ் மொழி, வரலாறு அனைத்தும் 2வது பட்சம் என்றும், ஹிந்தி மொழி தான் முதன்மையானது என்று அவர்கள் வெளிப்படையாக கூறுகின்றனர். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான், தமிழகத்திற்கான ரூ.3,500 கோடியை விடுவிப்போம் என்று இருக்கின்றனர்.
நீட் தேர்வினால் 87 சதவீதம் தமிழ் மாணவர்களின் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்கு செல்கிறது. 70 சதவீத மாநில பல்கலைகளில் துணை வேந்தர் இல்லாமல் இருக்கிறது. காரணம் கவர்னர் தான். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால் பல்கலைகளை நடத்த நினைக்கிறார்.
தொகுதி மறுவரையறை மூலம் தமிழக குரலை ஒடுக்க முயற்சிக்கிறார்கள். தமிழக பிரதிநிதித்துவத்தை குறைக்க தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு கொண்டு வருகிறது. தமிழ் கலாசாரம் மீதான தாக்குதலை அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தை தொட விட மாட்டோம். அனைவரும் கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்கும் உரிமையை அரசியலமைப்பு வழங்குகிறது.
டெல்லி நகரம் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போலீசார் மாணவர்களை தாக்குகின்றனர். மாணவர்கள் போராட்டம் எதற்காக நடக்கிறது என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை. கடந்த 15 ஆண்டாக நாடகத்தை நடத்தி வருகிறார்கள். நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் தாக்குவதற்கு ஒருவரையும் அனுமதிக்க மாட்டோம். நாட்டின் ஜனநாயகத்தை பிரதமர் மோடி சீரழிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்