திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசிவிசு திருவிழா கொடியேற்றம்
1 min read
Flag-hoisting ceremony for the Aippasi Visu festival at the Thirukutralanathar Swamy Temple
11.10.2026
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரசித்தி பெற்ற குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா வெகுவிமர்சையாக நடத்துவது இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 6.05 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங் கியது. கொடியை கணேசன் பட்டர் தலைமையில் பிச்சுமணி, ஜெயமணி சுந்தரம், மகேஷ் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
இதில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வீரபாண்டியன், ராமலட்சுமி பெருமாள், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் அன்னையா பாண்டியன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் பா.துரை (எ) இராமையா, தென்காசி வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள் சொக்
கம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வ குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சிவ பூதகண வாத்தியங்களும் இசக்கப்பட்டன.
ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைக் ளில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், இரவில் கோயில் உள்பிரகாரத்தில் கேடயத்தில் வீதி உலா நடக்கிறது. விழாவில் 12ம் தேதி கேடயத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 13ம் தேதி காலையில் 8.40 மணிக்கு மேல் 9.40மணிக் குள் விநாயகர், முருகன், குற்றாலநாதர், குழல்வாய்
மொழி அம்பாள் கோயில் கேடயத்தில் எழுந்தருளல் நடக்கிறது. அக்.15ம் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் கோயில் மணிமண்டபத்தில் வைத்து நடராசமூர்த்திக்கு தாண்டவ தீபாரதனை நடக்கிறது.
16ம் தேதி காலை 10.30 மணிக்கு திருக்கோயில் மணிமண்டபத்தில் நட ராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாரா தனை நடக்கிறது. 18ம் தேதி காலையில் 10.40 மணிக்கு மேல் விசு தீர்த்தவாரி, 11.40 மணிக்குமேல் கேடயத்தில் காட்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இணை ரோஜாலி சுமதா, உதவி ஆணையர் ஆறுமுகம் அறங் காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், ராமலட்சுமி. சுந்தரராஜ். வீரபாண்டியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.