வடக்கிழக்கு பருவமழை 3 நாளில் தொடங்க வாய்ப்பு
1 min read
Northeast monsoon likely to set in within three days.
12.10.2026
வடக்கிழக்கு பருவமழை 3 நாளில் தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
அக்டோபர் 15ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. அடுத்த 2 அல்லது 3 தினங்களில் தென்மேற்கு பருவமழை காலம் விலகும். இதன் காரணமாக, தமிழகத்தில் அக்டோபர் 15ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,
தெற்கு அந்தமான் கடல் பகுதியை ஒட்டி வளிமண்டல சுழற்சி காரணமாக, நாளை (அக்.,13) தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.
மிதமான மழைக்கு வாய்ப்பு
நாளை (அக்.,13) மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்; தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.