October 12, 2026

Seithi Saral

Tamil News Channel

உச்சநீதிமன்றத்தை நோக்கி எதிர்கட்சி கூட்டணி பேரணி-ஞானேஷ்குமாருக்கு எதிராக வழக்கு

1 min read


Opposition alliance marches towards the Supreme Court – Case filed against Gyanesh Kumar.

12.10.2026

எஸ்ஐஆர், ஓட்டுத் திருட்டு உள்ளிட்டவற்றில் பாஜவுக்கு சாதகமாக ஈடுபட்டதாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மீது காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. அவர் பதவி விலக வலியுறுத்தி கடந்த சில நாட்களாக டெல்லியில் ராகுல் தலைமையில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சில நாட்களுக்கு முன், ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்தனர். இன்று டெல்லியில் தலைமை நீதிபதி சூர்யகாந்த்தை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டனர். ஆனால், அவர்களை சந்திக்க அவர் மறுத்துவிட்டார். மனு அளிப்பதற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தினார்.
இருப்பினும் உச்சநீதிமன்றத்தை நோக்கி இண்டி கூட்டணி சார்பில் பேரணி நடந்தது. ராகுல், பிரியங்கா, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பேரணியாக சென்றனர். ராகுல் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே உச்சநீதிமன்றத்திற்குள் செல்ல வேண்டும் எனக்கூறி தொண்டர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே, ராகுலின் சட்டக்குழுவினர் உச்சநீதிமன்ற பதிவாளரை சந்தித்தனர். அப்போது,தேர்தல் கமிஷன் மீதான புகார் குறித்து நேரில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். இதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் ராகுலால் உச்சநீதிமன்றத்திற்கு வர முடியவில்லை. இதனையடுத்து அவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரசன்னா ‘உச்சநீதிமன்றத்தில் ஞானேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார்.

ராகுலை போலவே கார்கே, அகிலேஷ், தேஜஸ்வி, மம்தா ஆதரவாளர் சவுகத் ராய் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *