‘ தலைமை நீதிபதி இண்டி’ கூட்டணி தலைவர்களை சந்திக்காதது ஏன்? கடிதத்தை காங். வெளியிட்டது
1 min read
Why did the Chief Justice not meet the ‘INDIA’ alliance leaders? Congress releases letter.
12.10.2026
தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக இண்டி கூட்டணி கட்சியினர் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் மற்றும் கரப்பான் அமைப்பினரும் போராட்டம் நடத்துவதால் டெல்லியில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று தலைமை நீதிபதி சூர்யகாந்த்தை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக ராகுல் கூறியிருந்தார். ஆனால், அதனை சூர்யகாந்த் நிராகரித்து விட்டார்.
டெல்லியில் தேசிய மனித உரிமை கமிஷனின் 33வது ஆண்டை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியினர் என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்து அனுப்பிய கடிதம் கிடைத்தது. ஆனால், ஏன் சந்திக்க முடியாது என்பதற்கான காரணத்தை விளக்கி பதிலளித்துவிட்டேன்.
உச்சநீதிமன்றத்தின் கதவுகள் அனைவருக்கும் திறந்து இருக்கும். சாமானிய மக்கள் மற்றும் அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம். நீதிமன்றத்தை அணுகுவதற்கு அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு. சட்டப்படி, அவர்களின் குறை எது என்றாலும் அதனை விசாரிப்போம் என்றார்.
இதனிடையே, ராகுல், கார்கே ஆகியோர் அனுப்பிய கடிகத்துக்கு பதிலளித்து சூர்யகாந்த் அனுப்பிய கடிதத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
அதில் அவர் கூறியதாவது: இன்று மாலை4 முதல் 5 மணிக்குள் சந்திக்க விருப்பம் தெரிவித்து அனுப்பிய கடிதம் கிடைத்தது.
- தலைமை தேர்தல் கமிஷனர்/ தேர்தல் கமிஷன்
2.ஏராளமான மாணவர்கள் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டது
3.மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது
4.ரயில்கள் ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட விஷயம் குறித்து மனு அளிக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விஷயங்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விவாதிக்க சந்திப்பது என்பது முற்றிலும் முரணானது. நெறிமுறைகள் மற்றும் நீதித்துறை சார்ந்த கண்ணியத்திற்கு ஒவ்வாதது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விவகாரங்களை கையாள்வதற்கு எந்தவொரு நிர்வாக அதிகாரமும் நமது அரசியலமைப்பு சட்ட வரம்பிற்குள் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை.
மக்களை பாதிக்கும் விவகாரங்களின் முக்கிய அம்சங்களை நீதித்துறை ரீதியாக பரிசீலனை செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. ஒவ்வொருவரின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதிலும், நிலைநிறுத்துவதிலும் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள உறுதிப்பாட்டை மீண்டும் நினைவுகூர்கிறேன்.
நிர்வாக ரீதியாக மனுவை சமர்ப்பிப்பதற்கு பதில், உச்சநீதிமன்றத்தில் நீதித்துறை அதிகாரங்களை நாடுவதே மிகவும் பொருத்தமானது. இதுபோன்ற விவகாரங்கள் தொடர்பாக சில வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரும். நேரிலோ அல்லது மின்னணு முறையிலோ நீங்கள் மனுவை தாக்கல் செய்யலாம். அத்தகைய மனுக்கள் சட்டத்தின்படி மிக விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு சூர்யகாந்த் கூறியுள்ளார்.