ஐந்தான்கட்டளை: மனிதக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாஜக எதிர்ப்பு
1 min read
Ainthankattalai: BJP opposes human waste treatment plant
13/10/2026
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஐந்தான்கட்டளை கிராமத்தில் பரும்பு பகுதியில் மனிதக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு மக்களிடயே எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.
இப்பகுதியில் மனிதக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி கடையம் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றியத் தலைவர் வைகுண்டராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில்
மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கடையம் மேற்கு ஒன்றியத் தலைவர் முருகன், பண்டரிநாதன், கார்மேகநாதன், பண்டாரம், முத்துக்குமார், முருகன்,
தாமரைச்செல்வி, ராஜேந்திரன்,
ஹரி கங்காதரன், முருகேசன், செல்லபாண்டியன், பச்சைக்கிளி, சிவசங்கரி, ஐயப்பன், கோமதி, சுடலைமுத்து, கணேசன், வேல்முருகன், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் செல்வகுமார், இசக்கி ஜெயம், ரவி, நாராயணன், அருணாசலம், மதி முருகன், சேர்மதுரை, இசக்கிமுத்து, ராமர், லிங்கத்துரை, பிரகாஷ், அருணாச்சலம், மணி, மகாராஜா உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் ஐந்தாங்கட்டளை கிராம பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.