October 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் 10 புதிய கட்டிடங்கள்-அமைச்சர் ராஜீவ் திறந்து வைத்தார்

1 min read

Minister Rajeev inaugurates 10 new buildings in Tenkasi

13/10/2026
தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மரு.வி.கே.ராஜீவ் அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய்.285,91 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 10 கட்டிடங்களை திறந்து வைத்து 561 பயனாளிகளுக்கு ரூபாய். 475.64 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தென்காசி மாவட்டம். இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் இன்று 13.10.2026 நடைபெற்ற அரசு விழாவில் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் / தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மரு.வி.கே.ராஜீவ் அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய்.285,91 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 10 கட்டிடங்களை திறந்து வைத்து 561 பயனாளிகளுக்கு ரூபாய். 475.64 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும், தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மரு.வி.கே.ராஜீவ் பேசியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம். உங்கள் அனைவருக்கும் தெரியும் இந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நான் பொறுப்பு ஏற்று 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்று நிறைய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

முக்கியமாக இந்த மாவட்டத்தை கல்வி. மருத்துவம் விவசாயம் மற்றும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறும் அளவிற்கு நிறைய திட்டங்களை வகுத்து அதை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து நிறைய முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக இந்த விழா நடைபெறுகிறது.நான் கடைசியாக சாரல் திருவிழாவில் பேசி இருந்தேன், அதன் பிறகு இன்று நடைபெறும் விழாவில் பேசுகிறேன்.இங்கு பல துறைகளை சார்ந்த அரங்குகள் அமைத்திருக்கிறார்கள். அதில் வேளாண்மைத் துறையில் மூலம் என்னென்ன விளைச்சல் இம்மாவட்டத்தில் இருக்கிறது என்பது குறித்தும் வனத்துறையின் மூலம் நமது மாவட்டம் காடு மலைகள் சார்ந்த பகுதி என்பதால் வனவிலங்குகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாதவாறு நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்கியுள்ளனர்.

நமது மாவட்டத்தின் அடையாளமாக இருக்கும் குரங்குகள் நிறையா இறக்கிறது பிளாஸ்டிக் நிறைய பயன்பாட்டினால் அவை பாதிக்கப்படுகிறது இதை படிப்படியாக குறைக்க வேண்டும்.

என எனது பொறுப்பு மாவட்டமான தென்காசியில் உள்ள மகால், மண்டபங்களின் பொறுப்பாளர்களை அழைத்து கூடிய விரைவில் பேசலாம் என்று நினைத்துள்ளோம், அதில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நெகிழியின் பயன்பாட்டை குறைக்க வழி வகுக்கலாம் நினைத்திருக்கிறோம். எளிதில் மக்கக்கூடிய பொருட்களின் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக நிறைய முன்னெடுப்புகளை எடுக்கலாம் என நினைத்துள்ளோம். நம் மாவட்டம் ஒரு வளமான பகுதி இதை நாம் நல்ல விதமாக பாதுகாக்க வேண்டும் அதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். சீசன் நேரங்களில் நிறைய சுற்றுலாப் பயணிகள், வெளி மாநிலத்தில் இருந்தும் பயணிகள் வருகிறார்கள். அவர்களுக்கான விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தி குப்பைகள் கூடா வன்னம் முன்னெடுப்புகளை எடுக்க உள்ளோம். இந்த மாவட்டம் விவசாயம் சார்ந்த பகுதி நிறைய இடங்களில் விளைச்சல் அதிகமாக இருக்கும் முக்கியமாக ஆலங்குளம் பகுதியில் என்னென்ன விளைச்சல் இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து கொண்டேன். அரிய வகை பழங்கள் எல்லாம் இங்குதான் காய்க்கிறது அதை மேம்படுத்துவதற்கு நான் விவசாய துறையிடம் பேசியுள்ளேன். அழகான மாவட்டம் இது. வளமான மாவட்டம் இது ஆனாலும் தண்ணீர் பிரச்சனைகள் நிறைய வந்து கொண்டிருக்கிறது. நீர் வளம் சில பகுதிகளில் குறைவாக இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளும் எடுத்துகொண்டிருக்கிறோம்.

கூடிய விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படும் அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நிறைய பால வேலைகள் மற்றும் சாலை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது அதனை முடிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தென்காசி மாவட்டத்தை முன்னேற்றும் விதமாக தென்காசி மாவட்டத்தின் பையனாக அதை செய்ய நான் தயாராக இருக்கின்றேன். மக்களாகிய உங்களின் குறைகளை வாரந்தோறும் நடக்கும் திங்கள் கிழமை குறைகளையும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கலாம். நான் பொறுப்பு அமைச்சராக இருப்பதால் கூடிய விரைவில் இங்கு ஒரு அலுவலகமும் அமைக்க உள்ளேன் அங்கும் நீங்கள் வந்து உங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அனைத்து குறைகளுமே சரி செய்யப்படும். அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள், மாசு குறைப்பதற்காக பட்டாசுகளை முடிந்த அளவில் குறைத்து கொள்ள வேண்டும் வனம் சார்ந்த பகுதி என்பதால் விலங்குகளை பாதுகாக்கும் விதமாக இதை நாம் செய்ய வேண்டும். ஒதுக்கப்பட்ட நேரங்களில்மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். புகைகளை குறைக்கும் விதமாக நிறைய பட்டாசுகள் வந்துள்ளன, அதை வாங்கி வெடியுங்கள். உங்கள் அனைவரையும் புன்னகையுடன் பார்ப்பது தான் முதலமைச்சரின் ஆசை. அதை அவர் முகமாக இருந்து நான் செய்வேன். அனைவருக்கும் நன்றி என மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வி.கே.ராஜீவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் 561 பயனாளிகளுக்கு ரூ.475,64 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பாக மீட்க பயன்படுத்தும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்கு, பொதுசுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு காட்சி அரங்கு, பெண்களின் பாதுகாப்பிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கப்பெண் அதிரடிப்படை ஆகியவற்றை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வி.கே.ராஜீவ் அவர்கள் பார்வையிட்டார்.

பின்னர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் மூலம் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 14 உறுப்பினர்களுக்கு குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனங்களையும், வேளாண்மைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் 4 டிராக்டர்களையும், 2 டில்லர்களையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 20 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு சிறப்பு கைபேசிகளும், 2 மாற்றுத்திறனாளிபயனாளிகளுக்கு மின்மோட்டார் பொறுத்தப்பட்ட சக்கர நாற்காலிகளையும் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வி.கே.ராஜீவ் அவர்கள் வழங்கினார்.

மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.285.91 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 10 கட்டிடங்களை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வி.கே.ராஜீவ் அவர்கள் திறந்து வைத்தார்.

அதே போல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் கருணை அடிப்படையில் 11 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளும், மருத்துவம் மற்றும் மக்கள்

நல்வாழ்வுத்துறையில் தற்காலிக/ ஒப்பந்த அடிப்படையில் 5 செவிலியர்களுக்கு நியமன ஆணைகளையும் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வி.கே.ராஜீவ் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி, தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், இ.ஆப, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முனைவர்.ஆ.ரா.சிவராமன், புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்திர பாண்டியன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், மற்றும் அரசு அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *