சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அலுவலக வாசலில் தர்ணா
1 min read
Dharna at the entrance of the Sankarankovil Revenue Divisional Officer’s office.
14.10.2026
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் வீடுகளுக்கு கனிணி பட்டா வழங்க கோரி 200க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் கோட்டாட்சியர் அலுவலக வசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட திருவுடையான் தெரு, திருவள்ளுவர் தெரு ஆகிய இரண்டு தெருக்களில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கணினி பட்டா வழங்க கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அலுவலக வசலில் அமர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்…
அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து கனினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.