பெத்தநாடார்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்-நலத்திட்ட உதவியை ஆட்சியர் வழங்கினார்.
1 min read
Public outreach camp in Pethanadarpatti: Collector distributed welfare assistance.
14.10.2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், பெத்தநாடார்பட்டி கிராமம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 50 பயனாளிகளுக்கு ரூபாய்.11.32 இலட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், வழங்கினார்.
இம்மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், பேசும்பொழுது கூறியதாவது:-
அனைவருக்கும் வணக்கம். இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் மக்களை சந்தித்து மக்களிடமிருந்து குறைகளை கேட்டறிந்து அதை சரி செய்வது உங்கள் ஊருக்கு தேவையானவற்றை அனைத்தையும் எங்களிடம் நேரடியாக கூறுங்கள். அனைவராலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனுக்களை தர இயலாது. அதனால் தான் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குறைகளை மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவும் கூறலாம் நீங்கள் மனு மூலமாகவும் நேரடியாகவும் கூறலாம். அரசு அதிகாரிகளுக்கு என்னுடைய கோரிக்கை என்னவென்றால் ஏதேனும் மனுக்கள் வந்தால் அந்த கோரிக்கைகளை டனடியாக சரி செய்ய வேண்டும். னடியாக சரிசெய்ய முடியவில்லை என்றாலும் அதனை சரியான நேரத்தில் செய்து தர வேண்டும்.
இந்த முகாம் வெறும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மட்டும் வழங்கும் முகாமாக இல்லாமல் உங்களது குறைகளை கேட்டு அதனை சரி செய்யும் முகாமாகும். எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் உங்கள் குறைகளை சரிசெய்வது தான் எங்கள் நோக்கம் உதவிகள் யாருக்கு தேவைபடுகிறதோ அவர்களுக்கு சென்று அடைய வேண்டும். துப்புறவு பணியாளர்களுக்கும் நாம் ஆதரவு தர வேண்டும். நம்ம ஊர் நாமும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அதற்கு நீங்களும் கொஞ்சம் ஒத்துழைப்பு தர வேண்டும்.
அங்கன்வாடி பள்ளிக்கூடங்கள் என அனைத்து திறப்பு விழாவிற்கும் செல்லும் போது சில பள்ளிகளில் மாணவர்கள் வருவதில்லை அப்படி இருக்க கூடாது. பள்ளிக்கு தவறாமல் செல்ல வேண்டும். அப்போது தான் நல்ல வேலைக்கு செல்ல முடியும். கல்வி வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று சமூக நலத்துறையிருந்து குழந்தை திருமணம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. ஏதேனும் அப்படி நடந்தால் காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும்.
இதுதொடர்பாக தொலைபேசி எண் கொடுத்துள்ளோம் அதில் அழைத்து கூறலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சின்ன வயதில் திருமணம் செய்து வைப்பது என்பது அவர்களின் எதிர்காலத்தை நாமே அழிப்பதாகும். நாம் அந்த மாதிரியான திருமணங் களுக்கு ஆதரவு தர கூடாது. கல்விக்காக வேலைக்காக ஆதரவு தரலாம் ஆனால் இது போன்ற செயல்களுக்கு ஆதரவு தர கூடாது. நம் பிரச்சனை இல்லை என்று ஒதுங்கி இருக்க கூடாது .
இது ஒரு சமூக பிரச்சனை. இதை தடுப்பதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற பிரச்சனைகளை நாம் தடுக்க வேண்டும் ஆதரவு தர கூடாது. நாட்டிற்கு வளர்ச்சி வேண்டுமென்றால் இது போன்ற பிரச்சனைகள் இருக்க கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த திட்டங்கள் குறித்த விளக்க கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங். பார்வையிட்டார்.
இம்மக்கள் தொடர்பு முகாமில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முனைவர்.ஆ.சிவராமன், தனித்துணை ஆட்சியர் (ச.பாதி) ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் செல்லத்துரை, உதவி ஆணையர் (கலால்) சுப்பிரமணியன், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி மதிவதனா, ஆலங்குளம் வட்டாட்சியர் அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.