சங்கரன்கோவிலில் மேற்கூரை சோலார் திட்டம் சிறப்பு முகாம்
1 min read
Special camp for the rooftop solar scheme in Sankarankovil
14.10.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கிருஷ்ணா திருமண மஹாலில் தமிழ்நாடு மின்சார வாரியம் சங்கரன்கோவில் கோட்டத்தின் சார்பில் வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல் நிறுவி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் பயன்கள் பற்றிய சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு 3கிலோவாட்டிற்கு மேல் மேற்கூரை சோலார் நிறுவினால் மத்திய அரசின் மானியம் ரூ.78000/-ம் தமிழ்நாடு மாநில அரசின் மானியம் ரூ.22000/- ம் சேர்த்து ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்த சிறப்பு முகாமில் அரசு பதிவு பெற்ற முன்னனி சோலார் நிறுவனங்களான லீப் சால் சோலார், எலைட் இன்போ, கிரீன் பாய்ண்ட் சோலார், பாபு பிரசாத், பவர் டிவி பாய்ண்ட், பவர் சாப்ட் ஸ்டெர்லான் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பொதுத்துறை வங்கி பிரதிநிதிகள், மின்வாரியம் சார்பில் சங்கரன்கோவில் செயற்பொறியாளர் இராஜ்குமார், உதவி செயற்பொறியாளர் நகர் ஜெகன், உதவி செயற்பொறியாளர் கிராம பகுதி தங்கராஜ், உதவி மின்பொறியாளர் நகர் பகுதி கருப்பசாமி, இளநிலை பொறியாளர்கள் பால் ராஜ், கணேச இராமகிருஷ்ணன், அம்சவேணி, மெர்லின், வேலாயுதம், சங்கர், மதிப்பீட்டு அலுவலர் மகாராசன் உட்பட சங்கரன்கோவில் கோட்டத்தின் அலுவலர்கள் கலந்துகொண்டு திட்டங்களின் பயன்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், வங்கி கடன் திட்டங்கள் பற்றிய விளக்கங்கள் எடுத்துக் கூறினர்.
இந்த சிறப்பு முகாமில் மின்நுகர்வோர்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், விசைத்தறி உரிமையாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் ஏற்கனவே மேற்கூரை சோலார் நிறுவி பயன்பெற்ற பயனாளிகளின் வீடியோ எல்.இ. டி திரையில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தில் ஒளிபரப்பப்பட்டது.