October 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்

1 min read

Farmers stage a siege protest in front of the Tenkasi Collector’s office.

14.10.2026

தென்காசி மாவட்ட வனத்துறையை கண்டித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மாவட்ட விவசாய சங்கத்தினர் டேனிஅருள்சிங் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் பொதுமக்களின் சாலையை அடைத்து விவசாயிகளின் போக்குவரத்தை தடுத்தது, மேய்ச்சல் நிலங்களை கையகப்டுத்திக்கொண்டு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்காமல் தடுப்பது , வேளாண் பயிர்களை சேதப்படுத்திவரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தவறியது என விவசாயிகள், பொதுமக்கள் விரோத போக்கை கடைப்பிடித்து வரும் தென்காசி மாவட்ட வனத்துறையை கண்டித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கங்கள் சார்பாக மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவர் டேனி அருள்சிங் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

ஊத்துமலை பகுதி விவசாயிகள் திரளாக கலந்து கொண்ட இந்த முற்றுகை போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு வனத்துறையினர் மீது மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மேலும் விரைவில் மாவட்ட சங்கத்தின் தலைவர் டேனி அருள் சிங் தலைமையில் வனத்துறையை கண்டித்து மக்கள் திரள் போராட்டம் நடத்திட விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் தீர்மானித்துள்ள தாக கூறினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *