October 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை -ஆட்சியர் அறிவுறுத்தல்

1 min read


Heavy rain warning for Tenkasi district – Collector’s instructions

18.10.2026
தென்காசி மாவட்டத்தில் நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் திருரஞ்ஜீத் சிங், கேட்டுக்கொண்டுள்ளார்

வடகிழக்கு பருவமழை 2026 துவங்கி உள்ளதை முன்னிட்டு பரவலான கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையத்தினால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. எல் நினோ காரணமாக மழையின் அளவு அதிகரிக்ககூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட மழை நேரங்களில் நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொது மக்கள். கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

1 வடகிழக்கு பருவமழை காலங்களில், பொது மக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  1. மாவட்டத்திலுள்ள இராமநதி, கடனாநதி, குண்டாறு, அடவிநயினார் மற்றும் கருப்பாநதி அணைகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகட்டு பகுதிகளுக்கு பொது மக்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

3 பொது மக்கள் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் போது திறந்த வெளியில் நிற்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  1. மழை வெள்ள நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது. வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

5 வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

  1. பொது மக்கள் தங்களது ஆதார் / குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  2. பேரிடர் காலங்களில், பொது மக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
  3. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசர கால கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

பொது மக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1077, 04633-290548 தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். பொது மக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

மேற்கண்டவாறு ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *