October 18, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் அமைச்சர் அருண் ராஜுக்கு வரவேற்பு

1 min read

Reception for Minister Arun Raj at Kadayam

18.10.2026

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜுக்கு கடையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் விபின் சக்கரவர்த்தி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்படி கடையம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சிய காந்தன் தலைமையில் கீழக்கடையம் கிளைச் செயலாளர் சதீஷ் முன்னிலையில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய பொருளாளர் விவேக், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் சுனில் மேண்ட்லி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மனோஜ் பினு, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் வழக்கறிஞர் நியாஸ், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் மைமூன் பேகம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விஜய், பொட்டல்புதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஹசன் பக்கீர், வடக்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் முத்துச்செல்வி, கிளைச் செயலாளர்கள் ராமர், சிவா, மணி, பிரேம் ஆனந்த், அகமது, வழக்கறிஞர் ஸ்ரீராம் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *