அத்வானி டிஸ்சார்ஜ்
1 min read
Advani discharged
19.10.2026
பழம்பெரும் பா.ஜ.க. தலைவர் அத்வானி 3 நாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
பழம்பெரும் பா.ஜ.க. தலைவர் மற்றும் முன்னாள் துணை பிரதமரான எல்.கே. அத்வானி (வயது 98) உடல்நல குறைவால் கடந்த 16-ந்தேதி டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கடந்த 3 நாள்களாக அவருக்கு மூத்த நரம்பியல் துறை ஆலோசகரான டாக்டர் வினீத் சுரி தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் அவருடைய உடல்நலம் தேறியது. இதனை தொடர்ந்து, சிகிச்சை முடிந்து அவர் இன்று வீடு திரும்பினார்.
இந்திய அரசியலில் பல தசாப்தங்களாக முக்கிய பங்கு வகித்தவரான, பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று நாடு முழுவதுமுள்ள அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். மத்திய மந்திரி ஜே.பி. நட்டா மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை சந்தித்து விசாரித்ததுடன், அவருடைய உடல்நலம் பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.