October 20, 2026

Seithi Saral

Tamil News Channel

தேநீர் கடை ஊழியர் மீது தாக்குதல்: காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

1 min read

Assault on tea shop worker: Assistant Sub-Inspector of Police suspended

19/10/2026
தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையில் தேநீர் கடை ஊழியரைத் தாக்கியது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

குத்துக்கல்வலசை -மதுரை பிரதான சாலையில் இயங்கி வரும் தேநீர்கடையில் உணவு வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக கடையில் பணிபுரியும் பெண் ஊழியரை அசிங்கமாக பேசி, மணிகண்டன் (25) என்பவரை போலீஸார் கையால் தாக்கியுள்ளனர்.

இந்த காட்சிகள் அந்தக் கடையிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக கடை ஊழியர் பேச்சியம்மாள் (27), அளித்த புகாரின் பேரில் சம்பவத்தில் ஈடுபட்ட தென்காசி மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் (35) மற்றும் அவரது நண்பர்கள் சாமிநாதன் (33), தமிழ்மணி (35), சுரேஷ் (25) ஆகியோர் மீது இலத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் பரிந்துரை செய்ததன் பேரில், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு, உதவி ஆய்வாளர் கார்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *