October 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடியில் கனமழை; இடி தாக்கி இயேசு சிலை சேதம்

1 min read

Heavy rain in Thoothukudi; statue of Jesus damaged after being struck by lightning

20/10/2026
தூத்துக்குடி மாநகரில் பெய்த பலத்த இடியுடன் கூடிய மழையின்போது, சின்னக்கோவில் கோபுரத்தின் மீது இருந்த இயேசுவின் சிலை இடி தாக்கிச் சேதமடைந்தது.

தூத்துக்குடி மாநகரில் இன்று மாலை திடீரென பயங்கர இடி, மின்னலுடன்கூடிய கனமழை பெய்தது. அப்போது நகரின் பல பகுதிகளில் பலத்த இடி சத்தம் கேட்டது. இந்த நிலையில், தூத்துக்குடியின் புகழ்பெற்ற சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் மேற்றாசன ஆலயமான தூய இருதய ஆண்டவர் ஆலய கோபுரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த இயேசுவின் சுரூபத்தின் மீது திடீரென பயங்கரப் பேரிடி தாக்கியது.

இதில் அந்த இயேசுவின் உருவச் சிலையின் இடது கரம் சேதமடைந்தது. நகரின் நடுப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலின் கோபுரத்தில் இடி தாக்கியபோதும், வேறு எந்தவித உயிரிழப்போ அல்லது பெரும் சேதமோ ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

இடி தாக்கிய உச்சிப் பகுதி சேதமடைந்தாலும், பெரிய பேராபத்துகளில் இருந்தும் பேரிடரிலிருந்தும் தூத்துக்குடி மக்களை இயேசுவின் திரு இருதயம் அற்புதமாகக் காப்பாற்றியுள்ளதாகக் கருதி, கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களிலும் வீடுகளிலும் இயேசுவிற்கு தங்களது கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்து உருக்கமான பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *