October 22, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: சன்னரக அரிசி விற்பனையை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

1 min read

Tenkasi: Collector inaugurates sale of fine-variety rice

21/10/2026
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் விலை நிலைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஏ தர சன்னரக அரிசியை ஒரு கிலோ ரூ.30/- க்கு ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ வீதம் கூட்டுறவு பண்டகசாலை மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி தென்காசி மாவட்டம் மேலகரத்தில் செயல்படும் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சுய சேவை பிரிவில் இன்று (2110.2026) மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், சன்னரக அரிசி விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப அவர்கள் கூறியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் 4 இடங்களில் கிலோ ரூ.30/-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யப்படும். அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 16 டன் சன்னரக அரிசி மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் 14F. பாரதி நகர், மேலகரம் என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சுயசேவை பிரிவு (தொடர்பு எண். 70944 02572), சங்கரன்கோவிலில் சங்கரன் கோவில் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் 216, ராஜபாளையம் மெயின்ரோடு, சங்கரன்கோவில் என்ற முகவரியில் செயல்படும் சங்கரன்கோவில் கூட்டுறவு பண்டகசாலையின் சுயசேவை பிரிவு (தொடர்பு எண்.93624 10333) கடையநல்லூரில் கடையநல்லூர் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் 8/26, தெற்கு ரதவீதி, மேல கடையநல்லூர், தலைமை தபால் நிலையம் அருகில் என்ற முகவரியில் செயல்படும் கடையநல்லூர் கூட்டுறவு பண்டகசாலையின் சுய சேவைப் பிரிவு (தொடர்பு எண். 70944 02758) மற்றும் சிவகிரியில் சிவகிரி கூட்டுறவு பண்டகசாலை சார்பில் 10, இராஜாஜி ரோடு, சிவகிரி என்ற முகவரியில் செயல்படும் சிவகிரி கூட்டுறவு பண்டகசாலையின் சுய சேவை பிரிவு (தொடர்பு எண்.94428 73371) ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படும் என்றும் மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை யர்வை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் சுயசேவை பிரிவு மூலமாக 6 அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் பின்வரும் விபரப்படி விற்பனை செய்யப்படுகின்றன என்றும் குறிப்பிட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் இப்பொருள்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்தார்.

கூட்டுறவுதுறையின் மூலம் விற்பனை செய்யபப்டும் மளிகை பொருட்களின் விலை விபரம் (தலா ஒரு கிலோ)

  1. புழுங்கல் பொன்னி அரிசி – ரூ.60/-
    2- துவரம் பருப்பு-ரூ.130/-
  2. உளுந்தம் பருப்பு-ரூ.140/-
  3. பூண்டு ரூ.240/-
    5.மல்லி (தனியா)- ரூ.240/-
  4. மிளகாய் ரூ.330/-
    இந்நிகழ்ச்சியில் தென்காசி மண்டல இணைப்பதிவாளர் கு.நரசிம்மன், முதுநிலை மண்டல மேலாளர் இரா.வெங்கட்லட்சுமி. துணைப்பதிவாளர்கள் த.பிரிட்டோ. ப.கோபிநாத். தென்காசி மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் செயலாட்சியர்/கூட்டுறவு சார்பதிவாளர் இரா.ராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் நா.ரமேஷ் பாபு, தென்காசி கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாளர் கோமதிசந்திரன், பண்டக சாலையின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *