October 22, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்- விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

1 min read

Appointment of Special Criminal Prosecutors for Tenkasi District – Collector advises candidates to apply

22.10.2026
தென்காசி மாவட்ட சிறப்பு குற்றவியல் வழக்குறிஞர் களாக நியமிக்க, தகுதியான வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது -மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தகவல்

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் சென்னை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் அலுவலக வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் அடிப்படையில், தென்காசி மாவட்டத்தில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம். 1989 (மத்திய சட்டம் 33/1989) இன் கீழ் வழக்குகளில் ஆஜராகும் வகைக்கு, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995 இன் விதி 4 இன் துணை விதி (1) இன் படி, 5 (ஐந்து) சிறந்த மூத்த வழக்கறிஞர்களை (Eminent Senior Advocates for SC/ST Act 1989) சிறப்பு குற்றவியல் வழக்குரைஞர்களாக (Special Public Prosecutor) நியமிக்கும் பொருட்டு, தகுதியான வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் வகைக்கு, அறிவிக்கை (Notification) 12.10.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 04.11.2026 ஆகும். அறிவிக்கை மற்றும் விண்ணப்படிவம் மாதிரியானது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்திற்குபட்பட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலான விருப்பமுள்ள தகுதியான வழக்கறிஞர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 04.11.2026 அன்று மாலை 05.45 மணிக்குள் கிடைக்கப்பெறும் வகையில், அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். உரிய காலத்திற்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு ஆட்சியர் திருரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *