கரப்பான் பூச்சி கட்சியை ஆதரிக்க மாட்டோம்: அண்ணாமலை பேச்சு
1 min read
We will not support the ‘cockroach’ party: Annamalai’s remarks
22.10.2026
கிருஷ்ணகிரியில் நடந்த பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் வீ த லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை பேசியதாவது: வீ த லீடர்ஸ் விரைவாக அரசியல் கட்சியாக மாற உள்ளது. தமிழகத்தில் அரசியல் தலைவராக பள்ளிகள், கல்லூரிகளுக்கு அதிகம் செல்வது நான். மாணவர்கள் எப்படிப்பட்ட தமிழகம், இந்தியா வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்கிறேன்.
அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். மற்ற மாநிலங்கள் வளரும்போது தமிழகம் வளரவில்லை. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் தனி நபர் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி, தொகை குறைந்துள்ளது. ஹரியானா 18 சதவீதம், உபி 12 சதவீதம் உயர்ந்தது. அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி தொகை உயர்ந்தது. தமிழகம் எதிர்மறை வளர்ச்சி கண்டுள்ளது. நமது மாநிலத்தில் வருமானம் வரும் தொழில், அதன் மூலம் கிடைக்கும் வருமானம், அரசுக்கு செலுத்தும் வரி குறைகிறது. இது மிக மிக அபாயகரமான விஷயம். பொருளாதார குறியீடு அடிப்படையில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளோம். இதேபோன்று நடந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் இன்னும் 3 இடம் கீழே இறங்கி விடுவோம்.
கவர்ச்சிகரமான திட்டங்கள் மக்களுக்கு பயன் கொடுக்காது. போட்டோஷூட் எதுவும் கொடுக்காது. நூலகத்தை திறந்து வைக்க 6 கோடி ரூபாய் செலவு செய்வது எதுவும் கொடுக்கப்போவது இல்லை. மேட்டூர் அணை சென்று தண்ணீரை திறப்பதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்வதால் எதுவும் நடக்காது. தமிழகத்திற்கு தேவை புதிய தொழிற்சாலை, வேலை வாய்ப்பு.இதை செய்யும் அரசுடன் வீ தலீடர்ஸ் அமைப்பு துணையாக இருக்கும்.
அரசியல் என்றால் நிறை குறை இருக்கும். இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் பரிசோதனையாக வீ த லீடர்ஸ் உள்ளது. இதுபோன்ற பரிசோதனை எங்கும் நடந்தது இல்லை. முதல் தேர்தலாக உள்ளாட்சி தேர்தலில் நிற்கிறோம். இதுவரை நடந்த அரசியலை திருப்பிப் போட்டு செய்கிறோம்.
சிஜேபி கட்சிக்கு எப்போதும் ஆதரவு கொடுக்க மாட்டோம். நமது இலக்கு வேறு. அவர்களது இலக்கு வேறு. சிஜேபி, திமுகவுக்கு போராட உரிமை இருக்கிறது. சிஜேபி தரப்பினர் ஏதோ ஒரு காரணத்திற்காக ஏதோ ஒன்றை கொண்டு வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சரியில்லை என சொல்லும் காங்கிரஸ், திருத்தப்பணியின் போது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்ததா? தேர்தல் முடிந்து, முதல்வர் பதவியேற்று 6 மாதங்கள் ஆன பிறகு வாக்காளர் பட்டியல் சரியில்லை என காங்கிரஸ் வந்து நிற்கிறது. இதனையும் சுட்டிக் காட்டுவோம். ஏன் நாடகம் போடுகிறீர்கள் என்று கேட்போம்.
தனி மனிதன் மீது பிரச்னை இருந்தால் அதனை சொல்ல வேண்டும். சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷன் சரியில்லை என்று சொன்னால் எப்படி. இந்த நாட்டில் நாங்களும் வாழ வேண்டும். இந்த அமைப்புகளை நம்பி குழந்தைகள் உள்ளனர். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.