அர்னாப் புயல் எச்சரிக்கை: சென்னைக்கு நேரடி பாதிப்பில்லை
1 min read
Cyclone Arnab warning: No direct impact on Chennai
25.10.2026
ஆந்திராவில் வருகிற 28-ந்தேதி கரைடை கடக்கம் அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பு இருக்காது என்று வானிலை மையம் இயக்குனர் துரை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ஆந்திரா பகுதியில் புயல் கரையை கடப்பதால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் விளக்கியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. சென்னையில் விட்டு விட்டு இரவு நேரங்களில் மழை பெய்து கொண்டே உள்ளது. கடந்த சில நாட் களுக்கு முன்பு ஒரே நாளில் 36 செ.மீ. அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அடுத்தடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதன்பின்னர் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற் றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இது படிப்படியாக புயலாக வலுப்பெற்று வருகிற 28-ந்தேதி ஆந்திரா வில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று காலை இந்திய வானிலை மையம் சார்பில் வெளி யிடப்பட்டு ள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய காற்ற ழுத்தத் தாழ்வுநிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் தென் கிழக்கு நோக்கி நகர்ந்து உள்ளது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, அதே பகுதியில், அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டிருந்தது. இது அந்தமான் தீவு பகுதியில் உள்ள விஜயபுரத்திலிருந்து சுமார் 440 கி.மீ. வட-வடமேற்கிலும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து (880 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கிலும், காக்கிநாடாவிலிருந்து 980 கி.மீ. கிழக்கு- தென்கிழக்கி லும், மசிலிப்பட்டினத்தில் இருந்து 1080 கி.மீ. கிழக்கிலும் மற்றும் பாபட்லாவில் இருந்து 1150 கி.மீ. கிழக்கிலும் மையம் கொண்டிருந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று, கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில், தெற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. பின்னர் படிப்படியாக மேற்கு-வடமேற்கு திசையில் மீண்டும் வளைந்து செல்வதற்கு அதிக வாய்ப்பு கள் உள்ளது. மேற்கு-வட மேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து செல்லும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் நாளை (26-ந் தேதி) காலைக்குள் கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும். நாளை மறுநாள் (27 -ந்தேதி) காலை மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் கடுமையான புயலாகவும் மாற அதிக வாய்ப்பு உள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று மிகக் கடுமையான புயலாக மாறி, வருகிற 28-ந்தேதி அன்று காலையில் ஆந்திர கடற்கரை அருகில் மேற்கு மத்திய வங்கக் கடலை அடைய அதிக வாய்ப்புள்ளது. இது ஆந்திர மாநிலம் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே மிக கடுமையான புயலாக கரையை கடக்கும். இதன் காரணமாக ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரை பகுதி களில் அதிக பாதிப்பு ஏற்படலாம். 140 கி.மீ.வேகத்தில் புயல் கரையை கடக்கும் 28-ந்தேதி அன்று பலத்த காற்று வீசும். முற்பகலில் மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வரையிலான வேகத்தில் தொடர்ந்து காற்று வீசும். இதுமணிக்கு 140 கி.மீ. வரையிலும் அதிகரிக்கும். இவ்வாறு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதேபோன்று அரபிக் கடல் பகுதிகயில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலையை குறித்தும் வானிலை மையம் விளக்கி இருக்கிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதியில் நிலவும் குறைந்த காற்ற ழுத்தப் பகுதி இன்று காலை 5.30 மணி நிலவப்படி அதே பகுதியில் நீடித்தது. அதனு டன் தொடர்புடைய சூறா வளிச் சுழற்சி கடல் மட்டத்தில் இருந்து 5.8 கி.மீ. உயரம் வரை பரவியுள்ளது. கேரளா வழியாக வடக்குத் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி வரை சராசரி கடல் மட்டத்தில் இருந்து 1.5 கி.மீ. உயரம் வரையும் இது பரவியுள்ளது. வடகிழக்கு வங்கதேசம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சராசரி கடல் மட்டத்தில் இருந்து 1.5 கி.மீ. உயரம் வரை பரவி மேல் வளிமண்டல சூறாவளிச் சுழற்சி நீடிப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தீவிரமாகவோ அல்லது மிக தீவிரமாகவோ பொழிவதற்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கேரள கடற்கரைக்கு அருகில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகரக்கூடும் அதனால் கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.