October 25, 2026

Seithi Saral

Tamil News Channel

பிரபல சமையல் கலைஞர் பத்மஸ்ரீ தாமு காலமானார்

1 min read

Renowned chef Padma Shri Damu has passed away.

25.10.2026
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ் சமையற்கலையை உலகளவில் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான செஃப் தாமு அவர்கள் இறப்புக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

செஃப் தாமு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்திருந்தார். இதனால், அவர் இறந்து விட்டதாக வதந்திகள் பரவின. இதையறிந்த செஃப் தாமு தான் உயிருடன் இருப்பதாகவும், கால் வலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்திருந்தார். செப் தாமுவின் இயற்பெயர் தாமோதரன். 72 வயதான இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சமையல் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆரோக்கிய சமையல் ஆகியவற்றை செய்து காட்டி பிரபலமானவர் ஆவார்.

கடந்த 2010-ம் தொடர்ந்து 24 மணி நேரம் 30 நிமிடங்கள, 12 வினாடிகளில் 617 வகையான உணவுகளை சமைத்து கின்னஸ் சாதனை படைத்து இருந்தார். உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலை தொழில்நுட்பத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இந்த பட்டத்தை பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞர் என்ற பெருமையையும் செப் தாமு பெற்றுள்ளார்.

சமையல் கலையில் அவர் ஆற்றியுள்ள சாதனைகளை பாராட்டி 2025-ம் ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதையும் வழங்கி கவுரவித்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக பெண்கள் மத்தியில் செப் தாமுவின் சமையல் நல்ல வரவேற்ப யும் பெற்றுள்ளது. இப்போதும் குடும்ப தலைவிகள் பலர் அவரது சமையல் தொடர்பான வீடியோக்கள் போட்டு பார்த்து வீடுகளில் சமைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதன் மூலம் அவரது சமையலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கள்ளப்படம், உள்குத்து, ஒரு பக்க கதை போன்ற திரைப் படங்களிலும் நடித்திருக்கிறார். செப் தாமுவுக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். அவரது மறைவை தொடர்ந்து முதல் அமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அதி.மு.க. பொதுச்சயெலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *